Thursday 20 December 2012

நம்பிக்கை - ஒரு சுட்டியின் குட்டிக் கதை

மதிக்குமார் வழக்கம்போல் வகுப்புக்கு வந்தான். வாடிய முகம், கசங்கிய சீருடை, கைகளில் புத்தகப் பை மட்டும் இருந்தது. சக மாணவர்கள் ஓடிவந்தனர். "எங்கேடா மதிய உணவு?" என்று கேட்டனர். மௌனமாக இருந்த மதிக்குமார் சற்று நிமிர்ந்து, "நேரமாயிடுச்சுடா" என்று லேசான புன்முறுவலுடன் கூறினான். சிறிது நேரத்தில் வகுப்புகள் துவங்கின. தமிழாசிரியை 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' எனும் குறளை விளக்க, மீண்டும் வீட்டின் சூழலுக்குச் சென்றான் மதிக்குமார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத தாயையும், தந்தையையும் நினைத்து வகுப்பறையின் சன்னல் வழியாக பார்வையில் லயித்துப் போனான். மனமோ, கட்டட வேலைக்குச் செல்லும் எதிர் வீட்டு மாமா குடும்பத்தில் நின்றது. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த மாமாவுக்கு அந்த அத்தை தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கும் விதம்; அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு; அவர்கள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிச் சிரித்து அகமகிழும் காட்சி... அடடா! இவைகள் ஏன் இல்லாமல் போனது... காவல் ஆய்வாளரையும் கல்லூரி ஆசிரியையும் க...See More
நம்பிக்கை - ஒரு சுட்டியின் குட்டிக் கதை

மதிக்குமார் வழக்கம்போல் வகுப்புக்கு வந்தான். வாடிய முகம், கசங்கிய சீருடை, கைகளில் புத்தகப் பை மட்டும் இருந்தது. சக மாணவர்கள் ஓடிவந்தனர். "எங்கேடா மதிய உணவு?" என்று கேட்டனர். மௌனமாக இருந்த மதிக்குமார் சற்று நிமிர்ந்து, "நேரமாயிடுச்சுடா" என்று லேசான புன்முறுவலுடன் கூறினான். சிறிது நேரத்தில் வகுப்புகள் துவங்கின. தமிழாசிரியை 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' எனும் குறளை விளக்க, மீண்டும் வீட்டின் சூழலுக்குச் சென்றான் மதிக்குமார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத தாயையும், தந்தையையும் நினைத்து வகுப்பறையின் சன்னல் வழியாக பார்வையில் லயித்துப் போனான். மனமோ, கட்டட வேலைக்குச் செல்லும் எதிர் வீட்டு மாமா குடும்பத்தில் நின்றது. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த மாமாவுக்கு அந்த அத்தை தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கும் விதம்; அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு; அவர்கள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிச் சிரித்து அகமகிழும் காட்சி... அடடா! இவைகள் ஏன் இல்லாமல் போனது... காவல் ஆய்வாளரையும் கல்லூரி ஆசிரியையும் கொண்ட என் குடும்பத்தில்..? 

சேவல் ஒன்றின் குதூகல சத்தம் அவனது மன நினைவை மாற்ற, அங்கே ஓர் அரிசி மணியைக் கண்ட சேவல், கோழி ஒன்றைக் கூவி அழைத்து தருவதைக் கண்டான். மதிக்குமாருக்கு பசி மயக்கத்துக்கு இடையிலும்... தனது இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது.

- மு.நவீனா, 
அரசினர் மேல்நிலைப் பள்ளி, 
அரிமளம்

No comments:

Post a Comment