Sunday 16 December 2012


010 - 11ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 284 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11 கல்வியாண்டு தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரியார் பல்கலை தொலைநிலை கல்வியில் முறைகேடு

பெரியார் பல்கலையில், 33 தொலைநிலைக் கல்வி மையங்கள், அனுமதி கடிதம் பெறாமலேயே, மாணவர் சேர்க்கை நடத்தியுள்ள, பகீர் முறைகேடு வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவியின் உயிரை பறித்த மேஜிக்

தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளி மாணவி ஒருவர், மேஜிக் செய்வதாக கூறி, தண்ணீர் தொட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், தீயில் கருகி பலியானார்.

அரசு பள்ளி மாணவர்கள் வாய்க்காலில் தண்ணீர் எடுக்கும் அவலம்

ஈரோடு மாவட்டம் கவுண்டிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளி வேலை நேரத்தில், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் எடுத்த போது தவறி விழுந்தனர். பல இடங்களில் இதுபோன்று மாணவ, மாணவியரை உயிரை பணயம் வைக்கும் பணிகளுக்குக்கூட பயன்படுத்துவது, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தொடர்கிறது.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தகவல்கள் சேகரிப்பு

கல்வி மேலாண்மை தகவல் முறையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் மாணவர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொது தேர்வுக்கு தனியாக தகவல் சேகரிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

பட்டியல் தயாரித்ததில் குழப்பம் உபரியாக வெளியேற்றப் பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும்

பள்ளிகளில் உபரி என்று கருதி வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும். உபரி பட்டியல் தயாரிப்பதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயசந்திரன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

No comments:

Post a Comment