Friday 17 May 2013


2013 - 14ம் கல்வியாண்டு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் நடைபெறுவதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட CEO அலுவலகத்திலேயே நடத்த இயக்குநர் உத்தரவு.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் கோரிக்கை

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர் மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த ஆண்டு, விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.

No comments:

Post a Comment