Tuesday 21 May 2013

இது புதுக் கதை!

இது புதுக் தை!

முயலும் ஆமையும் மீண்டும் தங்களுக்குள் போட்டிவைத்துக்கொள்ள நினைத்து, ஒரு வெளவாலை நடுவராக நியமித்தன. மொட்டை மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி யோசித்த வெளவால் அருகில் இருந்த நதியை சுட்டிக்காட்டி ''இந்த நதியை நீந்திச் சென்று, மலை மேல் உள்ள கொடியைத் தொட வேண்டும்'' என்றது.

முந்திக்கொண்ட முயல், தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து நதியில் குதித்தது. நீரில் தத்தளித்தது. உடனே ஆமை, 'நம் எதிரி எனினும் விலங்காபிமானத்துடன் (அதாங்க மனிதர்களுக்கு மனிதாபிமானம், விலங்குகளுக்கு விலங்காபிமானம்) செயல்படுவோம்’ என நினைத்து முயலைக் காப்பாற்றியது. பிறகு, இரண்டும் மலை மேல் போட்டி போட்டுக்கொண்டு ஏறத் தொடங்கின. அப்போது, தடுமாறிய ஆமைக்கு முயல் உதவியது. இரண்டும் சேர்ந்தே வெற்றிக்கொடியைப் பிடித்தன.
...See More

''சபாஷ் மனுஷங்களும் இப்படி இருந்துட்டா நாட்டில் பிரச்னையே இல்லை'' என்றது வெளவால். (நடுவர் என்றால் தத்துவம் சொல்லணுமே!)

- சி.சதானந்த்

No comments:

Post a Comment