Friday 14 February 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.

No comments:

Post a Comment