தஞ்சை: தமிழகத்தின் 11-வது மாநகராட்சியாக தஞ்சையும், 12-வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் இன்று முதல் அந்தஸ்து உயர்த்தப்பட்டன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மேலும் படிக்க: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80309
மேலும் படிக்க: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80309

No comments:
Post a Comment