Sunday 7 April 2013

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !


60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஜோதிமாணிக்கம்" என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!. 

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது? !. இதன் காணொளியை கீழே இணைத்துள்ளேன், தவறாமல் காணுங்கள்.

மேலும் அறிய...
http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/


இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு...See More

No comments:

Post a Comment