Thursday 20 December 2012

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 

முதல் பக்கம் » பகவத்கீதை
கீதாச்சாரம்!
செப்டம்பர் 29,2011
  
அ-
+
Temple images
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்
Share  
Bookmark and Share

கீதாச்சாரம்!
செப்டம்பர் 29,2011
  
அ-
+
Temple images
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்

இன்றைய காலண்டர்
டிசம்பர்
20
வியாழன்இன்றைய காலண்டர்
டிசம்பர்
20
வியாழன்
நந்தன வருடம் - மார்கழி
5
ஸபர் 6
நந்தன வருடம் - மார்கழி
5
ஸபர் 6
மேலும்...நாளை »


தொடக்கக்கல்வி - 2013 - 14ஆம் கல்வியாண்டில் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்பாக 28.12.2012க்குள் கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு.
Source : www.tnkalvi.com

பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 75 டி.இ.ஓ.,கள் பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் : இயக்குனர் தகவல்
Source : http://www.tnkalvi.com/
CPS திட்டம் புதிதாக நியமனமாகும் ஊழியர்களுக்கு மட்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய ஊழியர்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதற்கான சட்டப்பிரிவுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டமுன்வரைவில் உள்ளன. 
Source : www.tnkalvi.com
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு புதிதாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கி… http://t.co/Tf2Ojm


தூக்கி விட்ட நம்பிக்கை: சிறுகதை - புலேந்திரன்

நீலகிரி மலையில் வாழும் மான்குட்டி மாலுவுக்கு பிறந்தநாள் விழா. பக்கத்து மலையில் உள்ள முயல்குட்டி முத்து, கரடிக்குட்டி கருப்பன், பூனைக்குட்டி மீனு ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தது மாலு.

வீட்டிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிட்டது முயல்குட்டி முத்து. பாட்டுப் பாடிக்கொண்டே ஜாலியாக போய் கொண்டிருந்தபோது பாசி படர்ந்திருந்த பாறையில் கால் வைத்து வழுக்கி குழிக்குள் விழுந்தது முத்து. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. பயத்தில் முத்துவின் இதயம் 'லப்டப்' 'லப்டப்' என்று மிக வேகமாக துடித்தது. யாராவது வந்து உதவி செய்வார்கள் என்ற நினைப்பில் குழிக்குள்ளேயே படுத்திருந்தது. ஆனால், யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியில் செல்பவர்கள் எல்லாம் முத்துவை பரிதாபமாக பார்த்து விட்டு சென்றுவிட்டனர்.
...Continue Reading
தூக்கி விட்ட நம்பிக்கை: சிறுகதை - புலேந்திரன்
 
நீலகிரி மலையில் வாழும் மான்குட்டி மாலுவுக்கு பிறந்தநாள் விழா. பக்கத்து மலையில் உள்ள முயல்குட்டி முத்து, கரடிக்குட்டி கருப்பன், பூனைக்குட்டி மீனு ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தது மாலு.

வீட்டிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிட்டது முயல்குட்டி முத்து. பாட்டுப் பாடிக்கொண்டே ஜாலியாக போய் கொண்டிருந்தபோது பாசி படர்ந்திருந்த பாறையில் கால் வைத்து வழுக்கி குழிக்குள் விழுந்தது முத்து. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. பயத்தில் முத்துவின் இதயம் 'லப்டப்' 'லப்டப்' என்று மிக வேகமாக துடித்தது. யாராவது வந்து உதவி செய்வார்கள் என்ற நினைப்பில் குழிக்குள்ளேயே படுத்திருந்தது. ஆனால், யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. அந்த வழியில் செல்பவர்கள் எல்லாம் முத்துவை பரிதாபமாக பார்த்து விட்டு சென்றுவிட்டனர்.

'சரி, யாரிடமாவது நாமே உதவி கேட்கலாம்' என்று எண்ணிய முத்து தலையை சற்று உயர்த்தி நோட்டமிட்டது. அதன் கண்ணில் நரி தென்பட்டது.

"குழிக்குள் விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். எழ முடியவில்லை... என்னை தூக்கிவிடு" என்றது முத்து.

"என் கை சுளுக்கி விட்டது. கையைக்கூட நீட்ட முடியவில்லை. வேறு யாரையாவது பார்..." என்று சொல்லிவிட்டு நடையை கட்டியது நரி.

சற்று நேரத்தில் யானை வந்து குழியை எட்டிப் பார்த்தது.

"அண்ணே, என்னை மேலே தூக்கி விடுங்க. ப்ளீஸ்!" என கெஞ்சியது முத்து.

"என் துதிக்கையில் முள் குத்திவிட்டதுடா தம்பி! என்னால் எதுவுமே செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு யானையும் போய்விட்டது.

உதவி செய்ய மனமில்லாத அந்த விலங்கு களின் மீது முத்துவுக்கு வெறுப்பு உண்டானது.

'இனி என்ன செய்வது?' என்று சிந்தனையில் முத்து ஆழ்ந்திருந்தபோது, "விழுந்துட்டியா..?" என்றொரு குரல் கேட்டு தலையை தூக்கிப் பார்த்தது முத்து.

மேலே கரடிக்குட்டி கருப்பன் நின்று கொண்டிருந்தது.

"மாலுவோட பிறந்தநாள் விழாவுக்கு போறப்பத்தான் கால் வழுக்கி குழிக்குள் விழுந்துட்டேன். என்னை தூக்கிவிடு" என்றது முத்து.

"எனக்கொரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து உன்னை தூக்கி விடுகிறேன். அதுவரைக்கும் குழிக்குள்ளேயே இரு" என்று சொல்லிவிட்டு கரடிக்குட்டியும் 'எஸ்கேப்' ஆகிவிட்டது!

நேரம் கடந்து கொண்டேயிருந்தது.

'கருப்பனை காணவில்லையே. விழா ஆரம்பிக்க இன்னமும் அரை மணிநேரம்தானே இருக்கு...' என்று புலம்பியது முத்து.

அப்போது அங்கு வந்த பூனைக்குட்டி மீனு, குழிக்குள் எட்டிப் பார்த்தது.

"கால் வழுக்கி குழிக்குள்ளே விழுந்துட்டேன். எல்லார்கிட்டேயும் உதவி கேட்டேன். யாருமே உதவி செய்யலே. கரடிக்குட்டிகூட உதவி செய்யாமல் ஓடிப்போயிட்டான்" என்று வருத்தத்துடன் மீனுவிடம் சொன்னது முத்து.

"விழுந்தால் என்ன..? எழுந்திடலாம். உன் உடம்பில் இன்னும் சக்தி இருக்கு. நீயே முயற்சி செய். உன்னால் கண்டிப்பாக முடியும்" என்று நம்பிக்கை கொடுத்தது மீனு.

"அப்படியா, என்னால் முடியுமா?" ஆச்சரியத்துடன் கேட்டது முத்து.

"மற்றவரின் உதவிக்காக காத்திருக்கக் கூடாது. உடல் பலத்தை விடவும் உள்ளத்தின் பலமே பெரியது. மூடப்பட்ட விதை, மண்ணை கீறிக் கொண்டு முண்டியடித்து மேலே வருகிறதே! அதுபோல் நீயும் முயற்சி செய். மேலே வந்துவிடுவாய்" என்று முத்துவை இன்னும் ஊக்கப்படுத்தியது மீனு.

மீனுவின் வார்த்தைகளால் உற்சாகமடைந்த முத்து, முழுமையாக முயற்சி செய்தது. சில நிமிடங்களில் மேலே வந்து சேர்ந்தது.

"கெட்டிக்காரன்! மேலே வந்து விட்டாயே..." சிரித்துக்கொண்டே சொன்னது மீனு.

"நீ நம்பிக்கை ஊட்டியதால்தான் என் மனதுக்கே தெம்பு வந்தது. உன் வார்த்தைகளால்தான் நான் மேலே வந்தேன்" என்றது முத்து. பின்னர் இருவரும் உற்சாகமாக விழாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

விழா ஆரம்பமானது. மாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு விருந்து சாப்பிட்டனர். மீனுவும், முத்துவும் வீடு திரும்பினர். அப்போது பரபரப்புடன் ஓடி வந்தது கரடிக்குட்டி கருப்பன். வழியில் வந்து கொண்டிருந்த முத்துவை அதிர்ச்சியுடன் பார்த்தது.

"உன்னை மேலே தூக்கிவிட்டது யார்?" என்று கேட்டது கரடிக்குட்டி.

"என் தன்னம்பிக்கைதான். இந்த மீனு சொன்னதைக் கேட்டு என் மீது எனக்கே நம்பிக்கை உண்டானது. ஒரே தாவலில் மேலே வந்துவிட்டேன்" என்றது முத்து. "அப்படியா..." என்று வியந்தது கருப்பன்.

"இனி வழியில் செல்லும்போது எங்காவது வழுக்கி விழுந்துவிட்டால் என்ன செய்வாய்?" என்றது மீனு.

"உதவிக்காக காத்திருக்கமாட்டேன். இரத்தம் ஒழுகினாலும் துடைத்துக் கொண்டே எழுந்து விடுவேன்" என்று சொல்லிவிட்டு கம்பீரமாகச் சென்றது முத்து.

- சுட்டி விகடன் 16-03-08


நம்பிக்கை - ஒரு சுட்டியின் குட்டிக் கதை

மதிக்குமார் வழக்கம்போல் வகுப்புக்கு வந்தான். வாடிய முகம், கசங்கிய சீருடை, கைகளில் புத்தகப் பை மட்டும் இருந்தது. சக மாணவர்கள் ஓடிவந்தனர். "எங்கேடா மதிய உணவு?" என்று கேட்டனர். மௌனமாக இருந்த மதிக்குமார் சற்று நிமிர்ந்து, "நேரமாயிடுச்சுடா" என்று லேசான புன்முறுவலுடன் கூறினான். சிறிது நேரத்தில் வகுப்புகள் துவங்கின. தமிழாசிரியை 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' எனும் குறளை விளக்க, மீண்டும் வீட்டின் சூழலுக்குச் சென்றான் மதிக்குமார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத தாயையும், தந்தையையும் நினைத்து வகுப்பறையின் சன்னல் வழியாக பார்வையில் லயித்துப் போனான். மனமோ, கட்டட வேலைக்குச் செல்லும் எதிர் வீட்டு மாமா குடும்பத்தில் நின்றது. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த மாமாவுக்கு அந்த அத்தை தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கும் விதம்; அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு; அவர்கள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிச் சிரித்து அகமகிழும் காட்சி... அடடா! இவைகள் ஏன் இல்லாமல் போனது... காவல் ஆய்வாளரையும் கல்லூரி ஆசிரியையும் க...See More
நம்பிக்கை - ஒரு சுட்டியின் குட்டிக் கதை

மதிக்குமார் வழக்கம்போல் வகுப்புக்கு வந்தான். வாடிய முகம், கசங்கிய சீருடை, கைகளில் புத்தகப் பை மட்டும் இருந்தது. சக மாணவர்கள் ஓடிவந்தனர். "எங்கேடா மதிய உணவு?" என்று கேட்டனர். மௌனமாக இருந்த மதிக்குமார் சற்று நிமிர்ந்து, "நேரமாயிடுச்சுடா" என்று லேசான புன்முறுவலுடன் கூறினான். சிறிது நேரத்தில் வகுப்புகள் துவங்கின. தமிழாசிரியை 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' எனும் குறளை விளக்க, மீண்டும் வீட்டின் சூழலுக்குச் சென்றான் மதிக்குமார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத தாயையும், தந்தையையும் நினைத்து வகுப்பறையின் சன்னல் வழியாக பார்வையில் லயித்துப் போனான். மனமோ, கட்டட வேலைக்குச் செல்லும் எதிர் வீட்டு மாமா குடும்பத்தில் நின்றது. வேலைக்குச் சென்று திரும்பும் அந்த மாமாவுக்கு அந்த அத்தை தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கும் விதம்; அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு; அவர்கள் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிச் சிரித்து அகமகிழும் காட்சி... அடடா! இவைகள் ஏன் இல்லாமல் போனது... காவல் ஆய்வாளரையும் கல்லூரி ஆசிரியையும் கொண்ட என் குடும்பத்தில்..? 

சேவல் ஒன்றின் குதூகல சத்தம் அவனது மன நினைவை மாற்ற, அங்கே ஓர் அரிசி மணியைக் கண்ட சேவல், கோழி ஒன்றைக் கூவி அழைத்து தருவதைக் கண்டான். மதிக்குமாருக்கு பசி மயக்கத்துக்கு இடையிலும்... தனது இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது.

- மு.நவீனா, 
அரசினர் மேல்நிலைப் பள்ளி, 
அரிமளம்

Chutti Vikatan added a new photo.
Photo
Like ·  ·  · 9 hours ago · 

"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா ...

Monday 17 December 2012


முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் GEOMETRY BOXES வட்டார அளவில் பெற்று வழங்க இயக்குநர் உத்தரவு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்ன செய்யப் போகிறோம்? புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் முருக செல்வராஜ் அவர்களின் அறிக்கை

ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் - RMSA இணை இயக்குனர் நரேஷ்

இராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசியதாவது:  ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமை யிலான விழாவினை சிறப்பாக நடத்தி முடிக்க ஒத்துழைத்த பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் முதன்மை செயலர் அவர்களின் வாழ்த்துச் செய்தி.

சென்னையில் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய துவக்க உரை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பள்ளிக் கட்டடம்

ரிஷிவந்தியம் அருகே கட்டி திறக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் வீணாகி வருகிறது.  ரிஷிவந்தியம் ஒன்றியம், நூரோலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 153 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 2 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

தொப்பையை குறைக்க சில முக்கிய குறிப்புகள் !

 பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் தனியார் அமைப்புகளுக்கு தடை

பள்ளிகளில் மாணவர்களுக்கு, "டெங்கு' கசாயம், தடுப்பு மாத்திரை வழங்க, தனியார் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "டெங்கு' காய்ச்சலால், தமிழகத்தில் ஏராளமானோர் இறந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் "டெங்கு' பாதித்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வை தொடங்கவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏப்ரல் 16–ந் தேதிக்குள் முடிக்கவும் அரசு தேர்வுகள் துறை முடிவு

இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அரசு பொதுத்தேர்வுகளான பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நல்ல முறையில் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்