Wednesday 28 August 2024

EMIS’ பணி - ஆசிரியர்கள் மகிழ்ச்சி

 EMIS’ பணி - ஆசிரியர்கள் மகிழ்ச்சி

TN-EMIS-School


'எமிஸ்’ பணியை ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு அதில் இருந்து இப்போது விடுதலை கிடைத்துள்ளது.

கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் வருகை மற்றும் மாணவர்களின் சேர்க்கை விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது.

எந்த பள்ளியில் எவ்வளவு பேர் படிக்கிறார்கள். மாணவர்கள் எத்தனை பேர் தினமும் வருகிறார்கள். எத்தனை ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். எத்தனை ஆசிரியர்கள் எந்த பள்ளியில் வேலை செய்கிறார்கள். பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் ஆசிரியர்களின் செயல்பாடுகள், மாணவர்கள் பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளியில் சேருவது உள்பட பல்வேறு தகவல்களை அரசால் ஒரு பட்டனை தட்டினாலே பார்க்க முடியும்.

இதற்காக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) என்ற இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கி இருக்கிறது. முதலில் ஆசிரியர்களுக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்றால், மாணவர்களின் வருகைப்பதிவை செய்தால் போதும் என்று ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகு பள்ளி கல்வித்துறையின் அத்தனை செயல்பாடுகளும் இந்த 'எமிஸ்’ தளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆனது.

இதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் தினமும் கையாளுகிறார்கள். இதனால் அவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விரை தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

இந்தநிலையில் அண்மையில் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழி கூட்டம் நடந்து முடிந்தது. இதில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (தொழிற்கல்வி) கலந்து கொண்டு பல்வேறு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை, நேர்முக உதவியாளர்களுக்கு வழங்கினார்.

அதன்விவரம் பின்வருமாறு: “அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும் போது கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரியவருகிறது. ஆகையால் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பனியினை ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் இதுவரை 100 சதவீதம் முழுமையாக பதிவேற்றம் செய்யவில்லை.

இதனால் அரசு செயலாளர் மற்றும் இயக்குனரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பல நாட்களாக கடுமையான பணிச்சுமையில் இருந்த ஆசிரியர்களுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tuesday 27 August 2024

*சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் என்ன*

 *சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் என்ன*


கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சாதிச்சான்று (Community Certificate)

மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது.


*சாதிச்சான்றின் பயன்*


மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும்.

அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும்.

பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காகவும்

மத்திய / மாநில பொதுத்துறையில் பணியில் சேர்வதற்கும்.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இந்த சாதிச்சான்றுகள் பெரிதும் உதவியாக உள்ளன.




*OBC சான்றிதழ்*


மத்திய அரசு அலுவலகங்களில் அல்லது துறைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு, இதர பிற்பட்ட வகுப்பு (OBC) சாதி சான்றிதழ் வரையறுக்கப்பட்டு அதனைத்தான் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. (அரசாணை எண். 12 பிற்பட்ட வகுப்பு, மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை நாள் 28-03-1994)-இல் உள்ளது.


சாதிச்சான்று வழங்குவதற்காக அனுப்பப்படும் மனுக்கல் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :-


சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்களுக்கு சாதிப்பிரிவைப் பொறுத்து VAO தனித்தனி அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வார்.


வகுப்பு அதிகாரம் பெற்ற அலுவலர்

பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினார் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர்கள்

ஆதி திராவிடர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பு வட்டாட்சியர்

பழங்குடியினர் வருவாய்க் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் / மாவட்ட ஆதிதிராவிட அலுவலர்

சாதிச்சான்று கோரும் மனு மற்றும் விசாரணை


சாதிச்சான்று வழங்கக் கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டியதில்லை (அரசாணை (நிலை) எண் 97, வருவாய் – நாள் 15-2-1994).


அரசாணை (நிலை) எண் 2240, வருவாய்த் துறை, நாள் 30-11-1988-இல் கூறியபடி :-


அரசால் வரையறுக்கப்பட்டுள்ள 14 கலங்கள் கொண்ட ஒரு பதிவேட்டினை, கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து அப்பதிவேட்டில் விசாரணை மேற்கொண்ட விவரங்களைப் பதிந்த பின் தனது அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் (RI – Revenue Inspector) மூலம் அனுப்புதல் வேண்டும்.


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு சான்று வழங்குமாறு கோரப்படும் மனுக்களை தொகுத்து, அதன் பட்டியல் நகல்களை ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் கிராமச் சாவடிகளில் விளம்பரப்படுத்தி மேற்காணும் சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால் விசாரணைக்கு முன் கண்டறியலாம்.


*சாதிச்சான்று வழங்கும் முன் விசாரணையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்*


மனுதாரரின் சாதியை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட சான்றாவணங்களைச் சரிபார்த்தல்.


i) நிரந்தர முகவரி மற்றும் இடம்


ii) பெற்றோரின் சாதிச்சான்றை சரிபார்த்தல்


பெற்றோர்கள் இல்லாத நிலையில் உடன்பிறந்த சகோதர / சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டிருப்பின் அவற்றின் மெய்த்தன்மையை சரிபார்த்து உறுதி செய்தல் வேண்டும்.


அரசுப் பணியில் பணிபுரியும், பெற்றோர்களின் பணிப்பதிவேட்டின் சாதிக்குறிப்பு கொண்ட முதல் பக்க நகல், உரிய அலுவலர்களால் மேலொப்பம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


சான்றுகளுக்கு பழைய பத்திரம் அல்லது பெற்றோர்கள் / உறவினர்களின் பள்ளிச்சான்று, பெற்றோர், மற்றும் மூதாதையர் வாழ்ந்த இடம், நிலையானச் சொத்துகள் உள்ள இடம், தாய்மொழி, திருமணம், கல்வி, பயிலும் இடம் அல்லது பயின்ற இடம் ஆகியவைகளை பரிசீலிக்கலாம். (அரசாணை (பல்வகை) எண் 2510, சமூக நலத்துறை, நாள் 23-09-1986)


உள்ளூர் விசாரணை, செய்யும் தொழில், பெறுகின்ற வருமானம்.


பழக்கவழக்கங்கள் மற்றும் பின்பற்றப்படுகின்ற சாதிக்குரிய வம்சாமுறை, கலாச்சாரம் போன்றவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல், தகவலளிக்கக்கூடிய ஏனையோரையும் முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும்.


மனுதாரரிடம் நேரடி விசாரணை மற்றும் தாக்கல் செய்யும் சான்றாவணங்களைப் பரிசீலித்தல்.


நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றின் ஒப்படை தொடர்பான ஆவணங்களில் மனுதாரர் அல்லது பெற்றோர்கள் வகுப்பு குறிப்பிடப்பட்டிருக்கும், இதனையும் சரிபார்க்கலாம்.


பெற்றோர்கள், தமிழ்நாட்டில் வசிக்கிறார்களா அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியே வசிக்கிறார்களா?


கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்ட முறையில் விசாரணை (Independent Enquiry)மேற்கொள்ள வேண்டும். சாதிச் சங்கங்கள் வழங்குகின்ற சான்றுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ள பழங்குடியினர் / அட்டவணை வகுப்பு / மிகப் பிற்பட்ட வகுப்பு / சீர் மரபினர் பட்டியலில் இடம் பெறாத எந்த சாதியினருக்கும் சான்றுகள் வழங்கக் கூடாது. (அரசு கடித எண் 11832 / பி.வ. / 92-5, பிற்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை, நாள் 29-10-1992).


*சாதிச்சான்று வழங்கும் போது*


பழங்குடியினர் ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அல்லது எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர் பழங்குடி வகுப்பை சார்ந்தவராகவே கருதப்பட வேண்டும்.


சாதி மற்றும் சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்க்கும் விழிப்புக் குழுக்கள்:


மாவட்ட விழிப்புக் குழு:

இதன் தலைவர் - மாவட்ட ஆட்சியர்

உறுப்பினர் - மானிடவியல் நிபுணர்

செயல் உறுப்பினர் - மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு) (பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்)

மாநில விழிப்புக் குழு:

மாவட்ட விழிப்புக் குழு ஆணைக்கெதிராக மாநில விழிப்புக் குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம். 


மாநில விழிப்புக்குழு உறுப்பினர்கள்.

தலைவர் – அரசு செயலர், ஆதி திராவிடர் நலத்துறை.

உறுப்பினர் – இயக்குநர், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், உதகை.

செயல் உறுப்பினர்

(ஆதி திராவிடர் வகுப்பு) – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர்.


(பழங்குடியினர் வகுப்பு) – பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்

(அரசாணை எண். 19, ஆதி திராவிடர் நலத்துறை, நாள் 24-01-2005)

பிற்பட்ட வகுப்பு, பிற்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பு : சாதிச்சான்று ஆய்வு

தலைவர் : அரசு செயலர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.

செயல் உறுப்பினர்கள் : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர்.

சாதிச்சான்று தவறுதலாக வழங்கும் நிலையில் VAO:


ஒரு கிராமத்தில் நன்கு ஆராய்ச்சி செய்து சாதிச்சான்று வழங்க VAO முழு பொறுப்பு உள்ளவர் ஆகிறார்.

தவறுதலாக சாதிச்சான்று பரிந்துரைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு VAO ஆட்படுவார்.

பிறப்பிட/இருப்பிடச் சான்று (Nativity Residential Certificate)

பிறப்பிடம் : பிறப்பிடம் என்பது ஒருவர் பிறந்த இடத்தைக் குறிக்கும். (அரசாணை (பல்வகை) எண் 111ம், ஆதி திராவிடர் நலத்துறை, நாள் :06-07-2005)


இருப்பிடம் : இருப்பிடம் என்பது ஒருவர் தொடர்ந்து வசிக்கும் இடத்தைக் குறிக்கும்.


*இச்சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்*


இச்சான்று வேண்டுபவர் ரூ.2க்கான கட்டண வில்லையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்.

இருப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் வசிக்க வேண்டும்.

வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ செலுத்தி இச்சான்றை பெறலாம்.

வருமானச் சான்று (Income Certificate)

இச்சான்று கல்வி உதவித்தொகை பெறவும், பள்ளி & கல்லூரிகளிலும் மாணவர் விடுதியில் சேரவும் இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


*வருமானச் சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்*


வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ கட்டணம் செலுத்தி இச்சான்றை பெற வேண்டும்.

உள்ளூர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்

குடும்ப அட்டையில் காண்பிக்கப்பட்டுள்ள வருமானம்

வாடகை வாயிலாக ஈட்டும் வருமானம்

பணிபுரியும் நிறுவனம், அல்லது பணி வழங்கியவர் தரும் வருமானச் சான்று

குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் நிலச்சொத்துக்கள் மற்றும் அதன் வாயிலான வருமானம்.

வருமான வரி / வேளாண்மை வருமான வரி விதிப்பு / விற்பனை வரி விதிப்பு ஆணை.

இதர வருமானம் ஏதேனும் இருப்பின்

வருமானச் சான்று வழங்கும் காலம் & செல்லுபடி ஆகும் காலம்:


இச்சான்று 15-நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.


இவை 6-மாத கால அளவு மட்டுமே செல்லத்தக்கது ஆகும். (அரசாணை (பல்வகை) 1509 – வருவாய்த் துறை நாள் 27-11-1991 படி ஆகும்)


நாட்டினச் சான்று (Nationality Certificate)

ஒருவர் இந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்று வட்டாட்சியரால் முறையான விசாரணைக்குப் பின் வழங்கப்படும் சான்றாகும்.


இச்சான்று கடவுச்சீட்டு (Passport) மற்றும் நுழைவு இசைவு (Visa) ஆகியவற்றை பெற பயன்படும்.


நாட்டினச் சான்று வழங்கும் போது VAO கவனிக்க வேண்டியவைகள்:


மனுதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? கிராமத்தில் நிரந்தர குடியிருப்பு கொண்டுள்ளாரா? என்று தேவையான சான்றாவணங்கள் மற்றும் உள்ளூர் விசாரணை மூலம் உறுதி அறிக்கை செய்ய வேண்டும்.


குடும்ப அட்டை, வாக்காளர் பட்டியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிரந்தர சொத்துகள் இருக்கும் இடம், வரி கட்டிய ரசீது போன்றாவணங்களைப் சரிபார்த்து VAO அறிக்கை வழங்க வேண்டும்.


VAOவின் பரிந்துரை, RI-யின் பரிந்துரையின் படி – வட்டாட்சியர் இச்சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பதாரருக்கு வழங்குவார்.


வாரிசுச் சான்று(Legal Certificate)

ஒரு குடும்பத்தின் தலைவரோ அல்லது அந்த குடும்பத்தின் உறுப்பினரோ எவரேனும் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பு, வீட்டு வரி, தொலைபேசி இணைப்பு, பட்டா, வங்கி கணக்கு ஆகியவற்றை மாற்றம் செய்ய வழங்கப்படுகிறது. இறந்தவர் அரசு ஊழியராக இருப்பின் அவரது வாரிசுதாரர் கருணை – அடிப்படையில் பணிநியமனம் பெறவும், குடும்ப ஓய்வூதியம் பெறவும், இறந்தவரின் நேரடி வாரிசுகளுக்கு அல்லது கணவர், மகன், மகள், தாய் ஆகியோருக்கு விசாரணைக்கு பின் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


*வாரிசுச் சான்று வழங்குவதில் VAOவின் பங்கு*


விண்ணப்ப மனுவில் ரூ.2-க்கு – வில்லை ஒட்ட வேண்டும்.

உரிய அலுவலர்களால் வழங்கப்பட்ட அசல் இறப்புச் சான்று

குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்

இறந்த நபர் குடியிருந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரணை.

சந்தேகம் ஏற்படின் இறப்புச் சான்றின் மெய்த்தன்மையை, எந்த அலுவலகத்தால் வழங்கப்பட்டதோ அங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.


வாரிசுச் சான்று அரசாணை (பல்வகை) 2906-இன் படி (04-11-1981) வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.

நேரடி வாரிசு அல்லாத கீழ்க்கண்ட இனங்களைப் பொருத்தவரை, வாரிசுச் சான்றிதழ் வழங்குவதைத் தவிர்த்து, உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ள மனுதாரர்களை அறிவுறுத்தவும் என வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இறந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி / கணவன் இருந்தாலும் குழந்தைகள் இருந்தாலும் பாகப்பிரிவினை தகராறு அவர்களுக்குள் இருப்பதாக தெரிய வரும் போதும்.


ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு காணாமற் சென்றுவிட்ட நபர்களை இறந்தவர்களாக கருதி சான்று வழங்கும் நிலைமை ஏற்படும் போதும்.

வட்ட எல்லைக்குள் குடியிருப்பு இல்லாமலும், வீடு மற்றும் சொத்து இல்லாமல் வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு வட்டாட்சியரிடம் வாக்குமூலம் கொடுக்க விசாரணைக்கு வராத நிலை ஏற்படும் போதும்

இறந்தவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மற்ற குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில் அரசுக் கடித (நிலை) எண் 1534, வருவாய்த்துறை நாள் 28.11.1991-இன் படி, வாரிசுச்சான்று வட்டாட்சியரால் 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் விசாரணையை VAO-காலதாமதம் செய்யக்கூடாது.

சொத்து மதிப்புச் சான்று

ஒப்பந்தக்காரராக பதிவு செய்யவும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலங்களில் பங்கு பெறவும் இச்சன்று தேவைப்படும்.


*சொத்து மதிப்புச் சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு*


இம்மனுவில் ரூ.10க்கான கட்டண வில்லை ஒட்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சொத்து மதிப்பு ரூ.50,000 வரையில் ரூ.100/-ம் அதற்கு மேல் ஒவ்வொரு 50,000/-க்கும் ரூ.200 வீதம் கட்டணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும்.

மனுதாரர் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா? சொத்து மதிப்பு கோரும் மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துகள் கிராமக் கணக்குகளில் மனுதாரரின் பெயரில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.


இம்மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பும்போது, அடங்கல், சிட்டா, A-பதிவேடு நகல்களை பரிசீலனை செய்து அவற்றை மேலொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

மனுதாரர் சொத்தை தனியாக பயன்படுத்துபவரா அல்லது கூட்டாக அனுபவிப்பவரா என்பதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.


கூட்டாக அனுபவித்தால் அவருடைய ஈவுக்கு மட்டுமே, சிட்டா, அடங்கல், A-பதிவேடு ஆகியவற்றில் வழியாக குறிப்பிட வேண்டும்.

சொத்து, கட்டடமாக இருந்தால் – தகுதி பெற்ற பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அறியப்படவேண்டும். 


வரையறுக்கப்பட்டுள்ள மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

சொத்துகளுக்கான பத்திரத்தின் மெய்த்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

சமீபத்திய 13-ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று அல்லது வேறு வில்லங்கம் இருக்கிறதா எனக் காண வேண்டும்.

அடமான பத்திரங்களை சரிபார்த்தல், மற்றும் விசாரணை செய்யப்படும் சொத்தின் பேரில் அடமானம் இருப்பின் அந்த மதிப்பினை சொத்து மதிப்பிலிருந்து கழித்துக் கணக்கிட வேண்டும்.


சொத்துவரி ரசீதுகள் மற்றும் நிலவரி ரசீதுகள்.

மனுதாரரின் வாக்குமூலம்.

சொத்து மதிப்புச் சான்றிதழ் நிலையான சொத்துக்களின் மதிப்பீட்டில் வழங்கப்பட வேண்டும். அசையும் சொத்துகளை கணக்கில் கொள்ளக் கூடாது.

விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு, சார்பதிவாளர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு இவற்றை பரிசீலித்து தக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

இச்சான்று வழங்கும் காலம், செல்லுபடி காலம் :


இவை 15 நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்படும்.


இவற்றின் செல்லுபடி காலம் வழங்கிய நாளிருந்து 6-மாதங்கள் மட்டும்.


ஆதரவற்ற குழந்தைச் சான்று

ஆதரவற்ற குழந்தைகள் கருணை/காப்பு இல்லங்களில் சேர்வதற்கு வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


*இச்சான்று வழங்குவதில் VAOவின் பங்கு*


குழந்தையின் தாய், தந்தை பற்றிய முழு விபரங்கள். எப்பொழுது காலமானார்கள் என்பதனை இறப்புச் சான்று அல்லது பதிவேடு மூலம் சரிபார்த்தல்.


குழந்தை உண்மையில் ஆதரவற்றதா – என முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.


குழந்தைக்கு பாதுகாவலர் உள்ளனரா? என விசாரணை செய்து வட்டாட்சியருக்கு VAO தெரிவிக்க இச்சான்று 7 நாள்களுக்குள் வழங்கப்படும் (வட்டாட்சியரால்).


ஆதரவற்ற விதவைச் சான்று

ஆதரவற்ற விதவைகள் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு இச்சான்று கோட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


இச்சான்றின் மீதான விசாரணை மேற்கொள்ளும் போது VAO-வின் பங்கு


மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கிறாரா?

விண்ணப்பதாரரின் மனைவியின் இறப்புச் சான்று சரிபார்த்தல் இறப்பு – விபரம்.

மனுதாரர் மறுமணம் புரிந்துள்ளாரா?

உண்மையில் ஆதரவற்ற நிலையில் மனுதாரர் உள்ளாரா?

கணவர் இறக்கும் போது, என்ன வேலை செய்தார், அவரின் சொத்துகள் மதிப்பு, அதன் வாயிலாக வரும் வருமானம் அவற்றின் வாயிலாக மனுதாரர் பெறக்கூடிய வருமானம் மற்றும் மனுதாரரின் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடும் சொத்துகள், அவற்றின் மூலமான வருமானம்.


சுயமாய் செய்யும் தொழில், வேலை போன்றவற்றால் கிடைக்கும் வருமானம் போன்றவைகளை பரிசீலனை செய்து, உள்ளுர் விசாரணை

மற்றும் கிராமப் பிரமுகர்களின் விசாரணை செய்து மனுதாரர் தகுதியுள்ளவரா என்பதனை VAO உறுதி செய்தல் வேண்டும்.

இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் காலம்:


*இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்*.


இச்சான்று வழங்கும் கால அளவு – 30 நாள்கள் ஆகும்.


கலப்புத் திருமணச் சான்று

கலப்புத் திருமணம் என்றால் என்ன?


இரண்டு மாறுபட்ட சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனமாகவும் – மற்றொருவர் வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்து புரிந்துகொள்ளும் திருமணம் கலப்புத் திருமணம் எனப்படும்.


*கலப்புத் திருமணச் சான்றின் பயன்கள்*


அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும்

இவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும்

அரசின் சலுகைகளைப் பெறவும் இவை பயன்படுகிறது.

இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

இச்சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு


மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கின்றாரா? அதற்கான சான்றாவணங்களை சரிபார்த்தல்.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள் தானா? சாதிச்சான்று ஏற்கனவே பெற்றிருந்தால் அதனை சரிபார்த்தல்.

திருமணச் சான்று, திருமணம் நடைபெற்ற இடம், முறையாக சட்டப்படி திருமணம் நடைபெற்றுள்ளதா என்று சரிபார்த்தல்.


மேற்கண்ட தகவல்களை சரிபார்த்து, ஆதிதிராவிடர் வாழும் பகுதியிலுள்ள முக்கியப் பிரமுகர்களிடம் மற்றும் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை VAO-வழங்கிய பின் வட்டாட்சியர் வழங்குவார்.

இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் கால அளவு:


இச்சான்றை வட்டாட்சியர் வழங்குவார்.


மனுசெய்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.


பள்ளிச்சான்று தொலைந்ததற்கான வழங்கப்படும் சான்று

பள்ளி / கல்லூரிகளில் வழங்கப்படும் அசல் சான்று தொலைந்துவிட்டால் அச்சான்றின் நகலைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு வட்டாட்சியரால் மேற்படி சான்று தொலைந்தது உண்மை என்று சான்று வழங்கப்படுகிறது.


இச்சான்றை வழங்குவதில் VAOவின் பங்கு:


காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி (FIR Copy)


இச்சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை என்ற காவல்நிலையத்தின் அறிக்கை.


மனுதாரரிடம் நேரடி விசாரணை எவ்வாறு சான்று தொலைந்தது என்பதை மனுதாரரிடம் விளக்கம் பெற்று VAO அறிக்கை அனுப்ப வேண்டும்.


இச்சான்று வழங்கும் அதிகாரி & காலம்:


வட்டாட்சியர் இச்சான்றை வழங்குவார்.


15 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.


கணவனால் கைவிடப்பட்டவர்

இது வட்டாட்சியரால் வழங்கப்படும் சான்று ஆகும்.


இச்சான்று வழங்கும் போது VAOவின் பங்கு :


மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கிறாரா?


மனுதாரருக்கும், அவர் கணவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது, அதற்கான சான்றாவணத்தை சரிபார்த்தல், உள்ளூர் விசாரணை மூலமும் உறுதிப்படுத்தல்.


மனுதாரர் ஏன் கணவனால் கைவிடப்பட்டுள்ளார் என்ற விசாரணை, கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனுதாரரை கைவிட்டு விட்டாரா? அப்படியானால் எப்போது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார்? கணவருடன் வாழ்ந்து, மனுதாரருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? அவர்கள் என்ன செய்கிறார்கள்?


பிரிந்து சென்ற கணவர், எங்கே சென்று விட்டார் என்பதையும் விசாரணை வாயிலாக அறிய வேண்டும்.


தற்காலிகமாக பிரிந்திருத்தலை சான்று வழங்குவதற்கு பரிசீலிக்கலாகாது.


இச்சான்று வழங்கும் போது கவனிக்க வேண்டியவைள்:


மனுதாரர் கணவனை விட்டுப்பிரிந்து அவரிடம் எவ்விதத் தொடர்புமின்றி தொடர்ந்து 5-ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றாரா?


அவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்ந்து வந்தால் கணவனால் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.


இச்சான்றை வழங்கும் அதிகாரி & காலம்


இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


இச்சான்று விண்ணப்பித்த நாளிருந்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

PG NEET Exam 2024 - Results வெளியீடு

  2024 - Results வெளியீடு

PG NEET Exam 2024 - Results வெளியீடு

 



 முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், முடிவுகள் ஆக.,22ம் தேதி வெளியிடப்பட்டன.

நாடு முழுதும் அரசு, சுயநிதி கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழகத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் உட்பட, நாடு முழுதும் 2.3 லட்சம் பேர் எழுதினர்.

முறைகேடுகளை தடுக்க, கடந்த 11ம் தேதி இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பிற் கான நீட் தேர்வு முடிவுகள், ஆக.,22ம் தேதி இரவு, www.natboard.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்தாண்டில், 17 நாட்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்தாண்டு இரண்டு வாரத்தில், ரிசல்ட் வெளியிடப்பட்டு உள்ளது. பொது பிரிவினருக்கு 50 விகிதம்; பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 45; பட்டியலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40 விகிதமாக தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

கடந்தாண்டுகளில், அந்தந்த பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்தாண்டு விகிதாச்சார முறையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் மாநில மற்றும் அகில இந்திய இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கும் என, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது

GATE Exam 2025 - கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங

 GATE Exam 2025 - கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங

 

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற அல்லது சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற எழுத வேண்டிய முக்கிய தேர்வு, 'கேட்' எனும் 'கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்'.

முக்கியத்துவம்


கேட் தேர்வு அடிப்படையில் எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் - ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் -ஐ.ஐ.டி., இணைந்து நடத்துகின்றன. கேட் 2025 தேர்வை ஐ.ஐ.டி.,-ரூர்க்கி நடத்துகிறது.

தகுதிகள்


கேட்-2025 தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.

தாள்கள்


கேட் தேர்வு, 30 வெவ்வேறு துறைகளுக்கு நடத்தப்படுகிறது. ஒருவர், ஒன்று அல்லது இரண்டு தாள்களை எழுத விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை


ஆன்லைன் வாயிலாக பல அமர்வுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 30 வெவ்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் இத்தேர்வில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பொறியியல் துறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 65 கேள்விகள் கேட்கப்படும். 'மல்டிபில் சாய்ஸ்' கேள்விகள் மற்றும் 'நிமெரிக்கல் ஆன்சர்' வடிவம் ஆகிய இரண்டு முறைகளில் கேள்விகள் இடம்பெறும். தேர்வு மதிப்பெண் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

தேர்வு கட்டணம்


ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 26 தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும். தாமதமாக அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் ரூ. 2,300 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.900 செலுத்தினால் போதுமானது. தாமதமாக செலுத்தினால் ரூ.1400.

தேர்வு நடைபெறும் தேதிகள்:

2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 26
விபரங்களுக்கு:
https://gate2025.iitr.ac.in

UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில் 0 comments

 UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்


மத்திய அரசால் 01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்


Click Here to Download - UPS - Unified Pension Scheme - Important Points - Pdf

NILP - எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

 NILP - எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

IMG_20240827_074341

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

065 - 01.09.2024 to 08.09.2024  LITERACY WEEK EVENT Proceedings👇👇👇👇

Download Here

சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம்

 சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவ

madurai%20high

பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்தது தொடா்பான வழக்கில், பள்ளிக் கல்வி இயக்குநா், செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

தமிழக பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக கருதப்படும் என பள்ளிக் 

கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பாணை வெளியிட்டாா். இதன் அடிப்படையில், சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு மாணவா்களும், ஆசிரியா்களும் வருகை தருகின்றனா்.

பள்ளி வேலை நாள்களை அதிகரிப்பது, குறைப்பது, விடுமுறை நாளாக அறிவிப்பது ஆகியவை தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவாகும். இதன்படி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் கிடையாது.

வாரத்தில் ஆறு நாள்களும் வேலை நாள்களாக இருப்பதால், ஆசிரியா்கள், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனா். அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம் 2009-இன்படி, மாணவா்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனா். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளனா்.

இவா்களுக்கு பள்ளிக் கல்வியில் குறைந்த நாள்களே வேலை நாள்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வி இயக்குநா் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவா் யாரையும் கலந்தாலோசிக்காமல், 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்து, தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளாா்.

அவரது இந்த அறிவிப்புக்கு ஆசிரியா்கள் சங்கங்கள் கடும் எதிா்ப்பை ஏற்கெனவே பதிவு செய்தன. இதற்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வெளியிட்ட வேலை நாள்கள் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமாா், இந்த வழக்கு குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநா், செயலா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

குரங்கு அம்மை நோய் கொரோனா போல பெருந்தொற்றாக மாறுமா?: உலக சுகாதார அமைப்பு விளக்கம

 குரங்கு அம்மை நோய் கொரோனா போல பெருந்தொற்றாக மாறுமா?: உலக சுகாதார அமைப்பு விளக்கம

https://jionews.com/share/summary/66c5767022fe1608a6607281

Monday 26 August 2024

Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்?

Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்? கிடைத்தது புதிய ஆதாரம்; அசத்தல் விபரம் உள்ளே.!
http://dhunt.in/Wh4l2

By லேட்டஸ்ட்லி via Dailyhunt

Saturday 24 August 2024

UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

 UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

https://way2.co/MTM5MzQwMDQ=/96_lng2

இலக்கிய மன்ற செயல்பாடுகள் 2024 - 2025 செயல்படுத்துதல் | பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 இலக்கிய மன்ற செயல்பாடுகள் 2024 - 2025 செயல்படுத்துதல் | பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

இலக்கிய மன்ற செயல்பாடுகள் 2024 - 2025 செயல்படுத்துதல் | பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20240822_110607

பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் மற்றும் போட்டிகள் . 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியாண்டு நாள்காட்டியில் மன்ற செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கேற்ப ஏப்ரல் 2025 வரை பள்ளி அளவிலான செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் . இம்மன்ற செயல்பாடுகளை ஒவ்வொரு வாரமும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் தலைமையில் திட்டமிட்டு அனைத்து வகுப்பு பிரிவுகளும் விடுபடுதலின்றி பாடத்திற்கேற்பவும் செயல்பாடுகளுக்கேற்பவும் பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட வேண்டும் .

Club Activities 2024-2025 -Reg.pdf👇👇👇

Download Here

அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தர

 அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தர

1299622

குடிநீர், கழிப்பறை வசதி, ஆய்வகவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித் துறையின் பொதுவான செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:


கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 175தொகுதிகளுக்குச் சென்று பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது பல பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், கழிவறைஉள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லாததை நேரில் பார்த்தேன்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்யும்போது, அங்கு வகுப்பறை, சுற்றுச்சுவர் கட்டிடம் தேவையென்றால் உடனடியாக அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தெந்த பள்ளிகளுக்கு என்னென்ன கட்டிடங்கள் கட்டலாம், அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்பதை அரசு திட்டமிடும். களஆய்வின்போது, தரம்உயர்த்தப்பட்ட ஒரு அரசு பள்ளியில் ஆய்வகமே இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


ஒரு பள்ளியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இருக்கிறதா என்பதை முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருந்தால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பைபாதியில் நிறுத்துவதைக் கண்டறிந்து உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் பள்ளிகளை முறையாகப் பார்வையிட்டு ஆய்வுசெய்ய வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் முறையான அனுமதி இல்லாமல் என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட முகாம்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி-மத மோதல்கள் ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


முதல்வரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதுடன் உணவின் தரத்தையும், உணவு காலதாமதமின்றி மாணவர்களைச் சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, சென்னை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பரிசுப்பதிப்புகளாக கொண்டு வரப்பட்டுள்ள ‘மிளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பின் கீழ் ‘சென்னை டு மெட்ராஸ்’ என்ற புகைப்பட ஓவிய நூலையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

SMC Reconstitution - புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் - Step By Step Procedure

SMC Reconstitution - புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் - Step By Step Procedure

Schools SMC Reconstitution 2024 - 26

Guidelines:

1.Number of Parents from Marginalised Communities : Atleast (0.75 * parent members)

2.Number of Female Members Mandated: Atleast (0.5* parent members)

3.Each member should be given their mobile numbers. The same mobile number cannot be added for other members.


உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய கைப்பேசி எண்ணை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு உறுப்பினருக்கு அளித்த கைப்பேசி எண்ணை வேறோரு உறுப்பினருக்கு அளிக்க இயலாது.


Select Member category

Chairperson

Vice Chairperson

HM

Teacher Representative

Parent Members

Local Body Representative

Educationist

Alumni


SMC%20Reconstruction


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்வது எப்படி


Click Here to Download - SMC Reconstitution - EMIS Website Entry - Step By Step Procedure - Pdf

CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தர

 CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தர


 UPSC Exams 2024-25 | Full Schedule

 12th Standard - Quarterly Exam Question Papers 2024 - Answer Keys - Time Table - Download

EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions! 0 comments

 EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions!

 ...

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 ...

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்கக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

 பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்கக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

...

உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது 0 comments

 உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

...

Friday 23 August 2024

TNSED ADMINISTRATORS APP NEW UPDATE - DIRECT LINK AVAILABLE!

 TNSED ADMINISTRATORS APP NEW UPDATE - DIRECT LINK AVAILABLE!


*🌈VERSION 0.2.5


*🌈UPDATED ON 22nd AUGUST


*🌈WHATS NEW?


*🔥Palli Paarvai, OOSC & SIDS Module Changes


👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring

சர்க்கரை எப்படி தயாரிக்கிறார்கள் அரிய காணொளி

 

சர்க்கரை எப்படி தயாரிக்கிறார்கள் அரிய காணொளி

Wednesday 21 August 2024

இரவு 10 மணிக்கு மேல் விழித்திருப்பவரா நீங்கள்?

 இரவு 10 மணிக்கு மேல் விழித்திருப்பவரா நீங்கள்?  

https://way2.co/MTM5MTA0MzI=/99_lng2

தமிழ் கவிஞர்கள் பிறந்த ஊர் பற்றிய தகவல்கள்

✍தமிழ் கவிஞர்கள் பிறந்த ஊர் பற்றிய தகவல்கள்:

✍இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்
✍திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்
✍உ.வே.சா பிறந்த?
உத்தமதானபுரம்
✍பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
✍விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி
✍முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை
✍பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி
✍தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை
✍பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு
✍அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்
✍திரு.வி.க பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)
✍மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி
✍மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்
✍மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்
✍நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து
✍காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்
✍குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
✍வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்
✍ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்
✍மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு
✍அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
✍கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
✍தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு
✍பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை
✍க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை
✍புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
✍அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை
✍அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்
✍வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி
காஸ்திக்கிளியோன்
✍முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்
✍பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்
✍கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி
✍செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
✍கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்
✍சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை
✍சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்
✍இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்
✍பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை
✍கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு
✍பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
சமுத்திரம்
✍மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை
✍மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
✍சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்
✍திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
✍குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்
✍நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்
Join @eetyjobs