Saturday, 8 March 2014

எந்தெந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் - தெரியுமா உங்களுக்கு?

வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதைப் பொறுத்தே, ஒருவரால் தனது வெளிநாட்டு கல்வி செலவை சமாளிக்க முடியுமா? என்பதை திட்டமிட முடியும். சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமல் வெளிநாடு சென்றால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாணவருக்கு எந்தளவு செலவாகும் என்பதைப் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.

TRB - PG சார்ந்த வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தில் (07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252

பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

ஓட்டுச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம்: பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஆனால் விசாரணைக்கு வருவது கேள்விக்குறியே!

ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான  வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைப் படியலில் இடம் பெற்றுள்ளது. வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைத்து விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாலும், மேலும் விசாரணை பட்டியலில் கடைசியில் இடம் பெற்றுள்ளதாலும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை எதிர்த்து தொடரப்பட்ட

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி, 10% அகவிலைப்படி வழங்குவதிலும் தாமதம்

தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.

Friday, 7 March 2014

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

என்.டி.எஸ்.இ., தேர்வு "ரிசல்ட்' வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, கடந்த நவம்பரில், தேசிய திறனாய்வு தேர்வை, தேர்வுத் துறை நடத்தியது.

பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்வு மத்திய அரசு ஒப்புதல்

நடப்பு நிதியாண்டில், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்த கடந்த ஜனவரி 13–ந் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ. அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14) விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING வழக்குகள்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள்(07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]GROUPING MATTERS

வேலைநிறுத்தத்தில் 60 ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு: சம்பளம், 'கட், துறை ரீதியான நடவடிக்கை

ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.

குரூப்-4: 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஏழு மாதங்களாக இழுபறியில் இருந்த, குரூப்-4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

தேர்வு முறைகேடு குறைந்தது: கல்வித்துறை அதிகாரிகள் வியப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில் வெறும், 14 மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக முறைகேடு எண்ணிக்கை குறைந்திருப்பது, கல்வித்துறை அதிகாரிகளிடையே, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Monday, 24 February 2014

பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி

 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது.

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற போட்டி! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்!

 மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும், அதற்கு பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.   பிராக்டிக்கல் தேர்வு அனைத்து பள்ளிகளிலும் கடந்த வாரத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்

குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால் சிங்குக்கு (வலது ஓரம்) விளக்குகிறார் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா. உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர்.கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை

எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா? சென்னை மேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. 

ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு

தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அண்மையில் தமிழக முதலமைச்சர் 2013ல் தேர்வு எழுதியவர்களில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5% மதிப்பெண் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து 2012ல் ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை

Sunday, 23 February 2014

பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு - தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரத்யேக பேட்டி

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன், நமது "TNKALVI"க்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  வருகிற பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெற உள்ள போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 60ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். கோரிக்கைகள் சார்பாக பள்ளிக்கல்விச் செயலாளருடன் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதையடுத்து திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID / PASSWORDஐ

இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது மங்கள்யான்: இஸ்ரோ

"செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட மங்கள்யான், தன்னுடைய இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது" என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது மங்கள்யான்: இஸ்ரோ

"செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட மங்கள்யான், தன்னுடைய இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது" என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Saturday, 22 February 2014

கல்விக்கடன் மறுப்பா? ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்

"வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் ரிசர்வ் வங்கியை அணுகலாம்" என சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பது எப்படி? முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு உரிய பல்வேறு அறிவுரைகளையும் சுற்றறிக்கையாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பி உள்ளது.

சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை அவசியமில்லை : மத்திய அரசு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கு ‘வாட்ஸ்- அப்’-ஜ பேஸ்புக் வாங்கியதால் கோடீஸ்வரர்களான முதலீட்டாளர்கள்

நிலையான தொலைபேசி பயன்படுத்தப்பட்ட காலத்தை விட, பேஜர், மொபைல் போன் என அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள், உள்ளங்கையில் உலகத்தை சுருங்கச்செய்தது. அதிலும் மொபைல் போன்களில் இன்டர்நெட் பயன்பாடு வந்த பிறகும், 3ஜி மொபைல்கள் வரத்தொடங்கிய பிறகும் தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி பெற்றது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கேன்வாஸ் ஷு மட்டுமே பயன்படுத்த ஆணை

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான சீருடையின் ஒரு பகுதியாக கேன்வாஸ் ஷ¤க்களையே பயன்படுத்த வேண்டுமென சி.பி.எஸ்.இ., அமைப்பு, தனது இணைப்பு பள்ளிகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

6 கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Friday, 21 February 2014

தேர்தல் ஆணையம் அதிரடி! விரைவில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை!

நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 16-வது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகள் உட்பட அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தினமலர்

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை