Friday 21 February 2014

18 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள 18 மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களை பத்வி உயர்வு / பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கம் புரம் தலைமையாசிரியர் இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு

* தும்பகுளம் தலைமையாசிரியர் தேனி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு

*மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* உசிலம்ப்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு

டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இதுகுறித்து மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் அளித்த அறிக்கையில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

Wednesday 19 February 2014

இந்த தகவலை எல்லாருக்கும் பகிருங்கள் நட்புகளே...!!

Share !!

அம்மா உணவகம் திறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது

அம்மா உணவகம் திறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது: சர்க்கரை பொங்கல் வழங்கி
கொண்டாட்டம்...http://www.maalaimalar.com/2014/02/19101821/amma-food-stall-opened-year-th.html
பிப்ரவரி 19: புகழ்பெற்ற மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி பிறந்த தினம்..

தமிழகத்தின் 11-வது மாநகராட்சியாக தஞ்சையும், 12-வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் இன்று முதல் அந்தஸ்து உயர்த்தப்பட்டன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தஞ்சை: தமிழகத்தின் 11-வது மாநகராட்சியாக தஞ்சையும், 12-வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் இன்று முதல் அந்தஸ்து உயர்த்தப்பட்டன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படும் என அறிவித்தார்.

மேலும் படிக்க: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80309

வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?​​

இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 55 சத வீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம்

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.

தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

583 முதுகலை ஆசிரியர்கள் நியமனம், 7ஆசிரியர்களுக்கு முதல்வர் இன்று பணி நியமனம் வழங்குகிறார்


ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

கை விரித்தார் கருணாநிதி... கை கொடுப்பாரா ஜெயலலிதா? 45 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?

அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்துவது வாடிக்கை. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதிலும், புதிய பள்ளிகளை திறப்பதிலும், ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும் தீவிரம் காட்டுவர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு : குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் உத்தரவு

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களை மாநில அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்ட

Tuesday 18 February 2014

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியல் தயார்

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014) சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

இது குறித்து தமிழ்நாடு அசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள் கூறியாதவது: பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது. அண்மையில் இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது. 

9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியில் சலுகை

நாடு முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், கல்விக் கடனுக்கான வட்டி செலுத்துவதில் மத்திய அரசு சலுகையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்பு:கல்விக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. 31.03.2009 ஆண்டு வரை கல்விக் கடன் பெற்றவர்கள் மற்றும் 31.12.2013 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இது பொருந்தும்.

NMMS -MODEL QUESTION PAPER

HSE MARCH 2014 TATKAL

HSE - MARCH - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET downlod

HSE - MARCH - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET

Class
Application Number
Date of Birth...
 Goto Home

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 55 சத வீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

Monday 17 February 2014

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்

அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு, அம்மாணவர், "டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார். 

மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு

தனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படவுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்து உள்ளன.

அரசு பள்ளிகளில் 100 சதவீத இலக்கு ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான குறிக்கோள்களை, ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 90 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி, நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றபின் இணையான பட்டம் இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் வழக்குமன்றத்தை நாடினர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம்

சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம், சுப்பிரமணியசுவாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்படலாம்.

50% டி.ஏ., மெர்ஜெர் அல்லது இடைக்கால நிவாரணம்

50% DA MERGE OR INTERIM RELIEF FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES
As everyone knows the Central Government has constituted the 7th Pay Commission and named its Chairmen recently. The decision of the government to constitute the 7th CPC has triggered many expectations among the central government employees. Among them was the merger of 50% DA with basic pay as done in the 5th CPC. But the 6th CPC did not recommended anything like that. It is understood that 

பள்ளிகளில் காணொளி காட்சி மையம்: கல்வித்துறையின் புதிய முயற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11 அரசு பள்ளிகளில் "இன்டர்நெட்" வசதியுடன் கம்ப்யூட்டர் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 (முழு விவரங்கள்) தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை

திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும். 
*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு 

*எஸ்யூவி வகை வாகனங்களுக்கு வரி 20% குறைப்பு 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2013ல் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு விரைந்து பணிநியமன ஆணை வழங்க TRBயிடம் முறையிட முடிவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் (2013) தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள், தங்களுக்கு விரைந்தது பணிநியமன ஆணை வழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர். அதற்காக இன்று ( 17.02.2014) சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

TATA இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண் நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.

Sunday 16 February 2014

பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர் வசதிக்காக, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு

மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பொது தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர் விவரங்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வெழுதும் மாணவர் குறித்த, சரியான புள்ளி விவரம்,

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்க்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்: அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார்.