Saturday 7 March 2015

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BSNL நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை 50%-மாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7-வது கட்ட விரிவாக்கப்பணிகள் ரூ.4800 கோடி செலவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதோடு அதன் பின் விலை குறைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க் கெப்பாசிட்டியை அதிகரித்து நாடு முழுவதும் 2500 நகரங்களில் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 2G டேட்டாவுக்கு வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக பி.எஸ்.என்.எல் 3G டேட்டாவை வழங்கி வருகிறது. குறிப்பாக, 1GB அளவு 3G இண்டர்நெட் ரூ.175-க்கும், 2GB ரூ.251-க்கும் வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment