Sunday 31 March 2013

ஜாக்கிரதை


வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது. ஓரிரு நாட்களில் கண் சிவந்து புடைத்தது. அதன் பின்னரே மருத்துவரிடம் காண்டிருக்கிறான் அந்த பையன் அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது தூசியில் புழுவின் முட்டை கண்ணில் சென்று இருக்கிறது அது படிப்படியாக அது பெரிதாகிய படியாலே அவனின் கண் சிவந்து வீங்கி இருக்கிறது. பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த புழுவினை அகற்றி இருக்கிறார்கள்.

தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும்
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா? — with Divya Savithri and 46 others.
கண்டிப்பாக பகிரவும்,

வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது. ஓரிரு நாட்களில் கண் சிவந்து புடைத்தது. அதன் பின்னரே மருத்துவரிடம் காண்டிருக்கிறான் அந்த பையன் அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது தூசியில் புழுவின் முட்டை கண்ணில் சென்று இருக்கிறது அது படிப்படியாக அது பெரிதாகிய படியாலே அவனின் கண் சிவந்து வீங்கி இருக்கிறது. பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த புழுவினை அகற்றி இருக்கிறார்கள்.

தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும்
@[341839099237748:274:அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா?]
General Newsபழநி அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பீடம் கண்டுபிடிப்பு
பழநி: பழநி அருகே, வீரக்குளத்தில், 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பத்ம பீடம் கண்டுபிடிக்கப்பட்டன. பழநி அருகே, ஆயக்குடி ஊர் எல்லையிலுள்ள, வீரக்குளத்தில், வரலாற்று ஆய்வாளர் கன்னிமுத்து, ஆசிரியர்கள் மூவர் கொண்ட குழு, ஆய்வு மேற்கொண்டது. அங்கு, 12ம் நூற்றாண்டை சேர்ந்த, அழிந்து போன கோவிலைக் ...மேலும் படிக்க

இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா? இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.


13hrs : 35mins ago
தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை ...Comments (4)
Photo


Special Newsஉலக வரலாற்றில் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன. கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி ...

Sportsடென்னிஸ்: செரினா சாதனை 
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் மியாமி
 
மேலும் படிக்க...



14hrs : 39mins ago
சென்னை: தமிழகம் முழுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என, தெரியாமல், உயர்கல்வித்துறை கையை பிசைந்து வருகிறது. அரசுத் தரப்பில் இருந்து, நேற்று மாலை வரை, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், நாளை கல்லூரிகள் திறப்பதற்கு ...
Comments (26)

Friday 29 March 2013

இந்த வாரம் இதழ்

அமெரிக்கா கோவில்
World News
தலவரலாறு : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹவாய்யன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அருள் மணம் ...
Comments
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு
புதுடில்லி: கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது. கல்வி பெறும் உரிமை சட்டம் 
மேலும் படிக்க...

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு

பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

CCEக்கு மாதிரி வகுப்பறை அமைத்து அசத்தும் அரசுப் பள்ளி



கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பல்வேறு புதுமைகளைப் புகுத்தி மாணவர்களை முன்னேற்றுவதில் முழுமூச்சாய் இயங்கிக் கொண்டுவருகிறது.
தவறாது சமூக விழிப்புணர்வு விழாக்கள் கொண்டாடுதல், “ஸ்மார்ட் கிளாஸ்” வடிவமைப்பு, மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் என இப்பள்ளியின் சிறப்பான வெற்றிகளின் வரிசையில் தற்போது இப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் “CCE மாதிரி வகுப்பறை” தனியார் பள்ளியின் வகுப்பறைகளுக்கு சவால் விடும் வகையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வாழ்வியல் பேராசிரியர் ஒருவர், உலகம் முழுவதும் சுற்றி, 5,000 தம்பதியர்களை பேட்டி கண்டு, தாம்பத்தியம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்... ...
மேலும் படிக்க
Current events

Tuesday 26 March 2013


கொடுமை. தாய் இறந்த பின்னும் அவளின்
மார்பில் தாய்ப்பால் தேடும் ஒரு மழலை.
ஈழத்தின் கடைசி கவிதை ''எங்களின்
கல்லறையில் எழுதுங்கள் நாங்கள்
இறக்கு காரணம் பேசிய தமிழ் தாய் மொழி''என்று
கொடுமை. தாய் இறந்த பின்னும் அவளின்
மார்பில் தாய்ப்பால் தேடும் ஒரு மழலை.
ஈழத்தின் கடைசி கவிதை ''எங்களின்
கல்லறையில் எழுதுங்கள் நாங்கள்
இறக்கு காரணம் பேசிய தமிழ் தாய் மொழி''என்று

TET - ENGLISH PAPER I & II STUDY MATERIAL


தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி - பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன் முறை செய்தல் சார்பான வரையறுக்கப்பட்ட படிவம்


முன்பணம் - ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை


234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in

பள்ளிக்கல்வி - அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல் படுத்த தமிழக அரசு உத்தரவு.

Current events

Kalvimalar News10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை 
மேலும் படிக்க..


Sportsஐ.பி.எல்., போட்டிக்கு தமிழக அரசு எதிர்ப்பு *இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது
சென்னை: ""தமிழகத்தில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள், அம்பயர்கள் பங்கேற்கக் கூடாது. இல்லையெனில், தமிழகத்தில் போட்டிகளை நடத்த அனுமதிக்க மாட்டோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா
 
மேலும் படிக்க...



மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில் ஒரு மாதத்தில் 19.6 லட்சம் இட்லி விற்பனை

சென்னை: மாநகராட்சி மலிவு விலை உணவகத்தில், ஒரு மாதத்தில், 19.6 லட்சம் இட்லிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. மொத்தம், 52.5 லட்ச ரூபாய்க்கு உணவுகள் விற்றுள்ளன.ஏழை, எளிய மக்கள், ...
Comments (49) மேலும் படிக்க...

Saturday 16 March 2013


Nijak Kadhai
மொபைலால் புற்றுநோய்! காது, மூக்கு மற்றும் தொண்டைக்கான சிறப்பு மருத்துவர், சையது சபீர் அகமது: வரமாய் அமைய வேண்டிய, அறிவியல் தொழில்நுட்ப கருவிகள், இன்றைய இளைஞர்களின் முறையற்ற செயல்பாடுகளால், சாபமாக மாறுகின்றன. மொபைல் போன், "ஹெட்செட்' மூலம், அளவுக்கு அதிகமாக பேசுவது, பாட்டு கேட்பதால், ...

 


Temple மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்:  இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்: இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், 
மேலும் படிக்க...


Sportsதவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் தவான் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட
 
மேலும் படிக்க...

dhavan 100

Current events

பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்

ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர்.

162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.



17hrs : 16mins ago
"சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சமீபத்தில், அறிவித்த விதிமுறைகள் அனைத்தும், நிறுத்தி வைக்கப்படும். இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், பார்லிமென்டில், இந்தப் பிரச்னையை ...

Friday 15 March 2013


தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில், ஒருவர் கூட ஓய்வூதியம், பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை!!!

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

 
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படு


Sportsமொகாலி டெஸ்ட்: ஜடேஜா அசத்தல் : ஆஸி., 273/7
மொகாலியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், இந்திய வீரர் ஜடேஜா "சுழலில்' அசத்த, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியா
 
மேலும் படிக்க...


Special Newsநுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்           மேலும் படிக்க...

புதுடில்லி: பெட்ரோல் விலை, இன்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 2 ரூபாய் குறைகிறது; டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா ...
மேலும் படிக்க...


20hrs : 16mins ago
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், "சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை சரி வதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் ...
Comments (28)


இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

தூக்கத்தை அறிய ஒரு தளம்!

தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?
...Continue Reading
இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

தூக்கத்தை அறிய ஒரு தளம்!

தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய 'ஸ்லீப் ஃபார் கிட்ஸ்’ வலைத்தளம் பக்கம் போய்ப் பார்க்கலாம்.

'சின்னப் பூச்சி முதல் பெரிய திமிங்கிலம் வரை எல்லா உயிரினங்களும் தூங்குகின்றன. ஒரு சில விலங்குகள் தினமும் 20 மணி நேரம்கூட தூங்குகின்றன. நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தூக்கம் அவசியம்!’

இந்த அறிமுகக் குறிப்புகளோடு, 'தூக்கம் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கும் இந்தத் தளம், தூக்கம் பற்றி வரிசையாகக் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களையும் தருகிறது.

'நாம் ஏன் தூங்கிறோம்?’

படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும், பாடத்தில் கவனம் செலுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு புதியவை பற்றி யோசிக்கவும், மூளைக்கு ஓய்வு தேவை என்பதாலும், தசைகளும் எலும்புகளும் வளரவும், அவற்றின் காயங்கள் ஆறவும், உடல் ஆரோக்கியத்தோடு இருந்து உடல்நலக் குறைவை எதிர்கொள்ளவும், உடலுக்கு ஓய்வு தேவை என்பதாலும் தூங்குகிறோம் என்று இந்தக் கேள்விக்கு பாயின்ட் பாயின்ட்டாகப் பதில் அளிக்கிறது.

அடுத்த கேள்வி, 'தூக்கத்தின்போது என்ன நடக்கிறது?’

முதலில் தூக்கத்தின் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆம், தூக்கம் என்பது   ஐந்து கட்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு கட்டமும் 90 நிமிடங்கள்கொண்டது. முதல் இரண்டு கட்டங்களில் தூக்கம் வந்தாலும், ஆழமான தூக்கமாக அது இருப்பது இல்லை. மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம். இதயத் துடிப்பும் சுவாசமும் சீராகி, உடலும் ஓய்வில் ஆழ்கிறது. ஐந்தாவது கட்டத்தில் மூளை விழித்துக்கொள்ள, கனவுகள் வருகின்றன.

இந்தச் சுழற்சியானது ஒவ்வொரு முறை தூங்கும் போதும் ஐந்து அல்லது ஆறு முறை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.

'எல்லாம் சரி, நாம் ஏன் இரவில் தூங்கிறோம்?’

இந்தக் கேள்விக்கும் இங்கே பதில் இருக்கிறது. ஒளிதான் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழித்து இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்து கிறது. காலையில் சூரிய ஒளியில் விழிக்க வேண்டும் என்பதை மூளைக்கு உணர்த்திவிடுகிறது. பின்னர் பகல் மாறி இரவு வரும்போது, மூளையில் மெலாடோனின் என்னும் ரசாயனம் சுரந்து, கண்களைத் தூக்கம் தழுவச்செய்கிறது.

சிறுவர்களைப் பொறுத்தவரை வயதுக்கு ஏற்றபடி சராசரியாக 10 மணி நேரம் தூக்கம் தேவை. இரவில் மட்டும் இல்லாமல் பள்ளி முடிந்து வந்த பிறகும் ஓரிரு மணி நேரம் தூங்கவேண்டும். அப்போதுதான் பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். புதிதாக யோசிக்கவும் முடியும்.

இப்படித் தூக்கத்தின் அவசியத்தைச் சொல்லும் இந்தத் தளம், நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா என்று அறிந்துகொள்வதற்காக, தூக்கத்துக்கான டைரியை உருவாக்கிக்கொள்ளவும் உதவுகிறது. தூக்கத்தைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டரும் கொடுக்கப்பட்டு உள்ளது. நன்றாகத் தூங்குவதற்கான வழிகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆலோசனைகளும் உண்டு.

கனவுகள் இல்லாமல் தூக்கம் உண்டா என்ன? கனவுகள் பற்றிய விளக்கமும் தனியே கொடுக்கப்பட்டு உள்ளது. தூக்கம் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் இந்தத் தளத்தில், தூக்கம் தொடர்பான புதிர்களும் விளையாட்டுகளும் இருக்கின்றன.

ஆக, தூக்கத்தை நன்றாகப் புரிந்துகொண்டு புத்துணர்வோடு இருப்பதற்கு, நீங்கள் நாடவேண்டிய தளம்: http://www.sleepforkids.org 

- சைபர்சிம்மன்

(சுட்டி விகடன் - நெட்டிஸம் தொடரில் இருந்து.)