Sunday, 29 September 2024

தொலைதூர கல்வியில் சேர செப்.30 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு


தொலைதூர கல்வியில் சேர செப்.30 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

 1318058

தொலைதூர கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திரா காந்திதேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூர கல்விதிட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ்படிப்புகளை வழங்கி வருகிறது.இந்நிலையில், 2024 ஜூலை பருவமாணவர் சேர்க்கைக்கான கடைசிதேதி மாணவர்கள், இல்லத்தரசிகள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோரின் நலனை கருத்தில்கொண்டு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொலைதூர கல்வியில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப். 30-ம் தேதி வரை சேர்ந்து கொள்ளலாம். சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு இந்த கால நீட்டிப்பு சலுகை பொருந்தாது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அக்.2-ல் கிராமசபைக் கூட்டம்: தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


அக்.2-ல் கிராமசபைக் கூட்டம்: தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 1318261

காந்தி ஜெயந்தி தினத்தில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாத 5 லட்சத்து 33,100 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க திட்டமிட்டு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் வாயிலாக 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் கடந்த ஜூலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அனைத்து நகர, கிராம பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து எனும் இலக்கை விரைவில் அடைவோம் என்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் இதுசார்ந்த தொகுப்பு அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?


களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

 IMG_20240928_112102

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

👉🏼 என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?

1. பக்ரித்

2. கிறிஸ்துமஸ்

3. தீபாவளி

4. ஈஸ்டர்

5. காந்தி ஜெயந்தி

6. புனித வெள்ளி

7. விடுதலை நாள்

8. கிருஷ்ண ஜெயந்தி

9. மே தினம்

10. மிலாடி நபி

11. மொகரம்

12. ஓணம்

13. பொங்கல்

14. ரம்ஜான்

15. குடியரசு தினம்

16. தெலுங்கு வருடப் பிறப்பு

17. விஜயதசமி

18. விநாயகர் சதுர்த்தி

(பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.)

👉🏼 எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 02.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.

👉🏼 எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?

IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.

👉🏼 எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?

IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.

👉🏼 எப்போது பிடித்தம் ஆரம்பமாகும் ?

பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.

 எப்படி விண்ணப்பிப்பது?

Kalanjiyam Appல் Login செய்யவும்.

பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.

அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.

இறுதியாக, Submit செய்ய வேண்டும்.

👉🏼விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?

ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.

பின் குறிப்பு :

தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.  ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்.

தமிழகத்தில் மாநகராட்சியோடு இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்கள்


தமிழகத்தில் மாநகராட்சியோடு இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்கள்


தமிழகத்தில் மாநகராட்சியோடு இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்கள்

👇👇👇👇👇👇👇

merger proposal 11.09.2024 - Download here

Tuesday, 24 September 2024

SSLC & HSE FIRST YEAR - NOMINAL ROLL Preparation in DGE Website Instruction!


SSLC & HSE FIRST YEAR - NOMINAL ROLL Preparation in DGE Website Instruction!

 



 

 

SSLC & HSE FIRST YEAR - NOMINAL ROLL Preparation in DGE Website Instruction! - Download

Pay Anomalies - இளையவர் - மூத்தோர் ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கான அடிப்படை தகுதிகள்


Pay Anomalies - இளையவர் - மூத்தோர் ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கான அடிப்படை தகுதிகள்


பணி மூப்பு பட்டியலின்படி மூத்த நிலையில் இருக்க வேண்டும். முரண்பாடு உருவானதாக கருதப்படும் நாளன்று மூத்த நிலையில் உள்ளவர் ஈடான அல்லது அதிக ஊதியம் பெற வேண்டும்.

பணி அமர்வு Rank-ல் மூத்த நிலையில் இருப்பதாலேயே மூத்த நிலையில் உள்ளவர்கள் இளையவருக்கு ஈடாக ஊதியம் ஈடு செய்ய கோர முடியாது இளையவர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றதால் கூடுதல் ஊதியம் பெறலாம்.

அல்லது மூத்த நிலையில் உள்ளவர் தண்டனை / ஊதியமில்லா விடுப்பு / தற்காலிகப் பணி நீக்கம் போன்ற நேர்வுகளில் ஊதிய உயர்வினை இழந்திருக்கலாம். இதனால் மற்ற நிலையில் இருப்பவர் Rank - அடிப்படையில் இளையவருக்கு ஈடாக ஊதியம் உயர்த்திக் கோர முடியாது.


Click Here to Download - Pay Anomalies ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்கான அடிப்படை தகுதிகள் - Full Details - Pdf

Tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயலி ( Apps


Tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயலி ( Apps)

அனைவருக்கும் வணக்கம்.

பின்வரும் இணைப்பில் உள்ள 4 செயலிகளும் tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியவை ஆகும்.


எனவே, தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தும் tab மற்றும் Smartboard களில் இச் செயலிகளை நிறுவி பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.


அனைவரும் பயன்படுத்திப் பயன்பெறும் வகையில் இணைப்புகள் கீழே கொடுத்துள்ளேன். நன்றி


 https://play.google.com/store/apps/details?id=com.gotowisdom.pschool


 https://play.google.com/store/apps/details?id=app.pschool.tamil


 https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.word.game.solliadi


 https://play.google.com/store/apps/details?id=com.rvappstudios.math.games.kids.addition.subtraction.multiplication.division

Monday, 23 September 2024

TNEB Bill Calculator - 2024

 

TNEB Bill Calculator - 2024
(Revised on July 01, 2024)

For Domestic Usage Only
Units Consumed:  
Units
(u)
SubsidyUnit RangeUnit
Cost
FromTo
≤ 100₹ 4.80 × u1100₹ 0.00
≤ 200₹ 4.80 × u1100₹ 0.00
₹ 2.45 × u101200₹ 2.35
≤ 400₹ 4.80 × u1100₹ 0.00
₹ 2.45 × u101200₹ 2.35
₹ 0.10 × u201400₹ 4.70
≤ 500₹ 4.80 × u1100₹ 0.00
₹ 2.45 × u101200₹ 2.35
₹ 0.10 × u201400₹ 4.70
₹ 0.15 × u401500₹ 6.30
≤ 600₹ 4.80 × u1100₹ 0.00
₹ 0.10 × u101400₹ 4.70
₹ 0.15 × u401500₹ 6.30
₹ 0.15 × u501600₹ 8.40
≤ 800₹ 4.80 × u1100₹ 0.00
₹ 0.10 × u101400₹ 4.70
₹ 0.15 × u401500₹ 6.30
₹ 0.15 × u501600₹ 8.40
₹ 0.20 × u601800₹ 9.45
≤ 1000₹ 4.80 × u1100₹ 0.00
₹ 0.10 × u101400₹ 4.70
₹ 0.15 × u401500₹ 6.30
₹ 0.15 × u501600₹ 8.40
₹ 0.20 × u601800₹ 9.45
₹ 0.20 × u8011000₹ 10.50
> 1000₹ 4.80 × u1100₹ 0.00
₹ 0.10 × u101400₹ 4.70
₹ 0.15 × u401500₹ 6.30
₹ 0.15 × u501600₹ 8.40
₹ 0.20 × u601800₹ 9.45
₹ 0.20 × u8011000₹ 10.50
₹ 0.25 × u> 1000₹ 11.55

Saturday, 21 September 2024

சனிக்கிழமைகளில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை

 சனிக்கிழமைகளில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை 

https://way2.co/MTQxNjIwODA=/95_lng2

யோகா, இயற்கை மருத்துவ படிப்பு செப்.23 முதல் கலந்தாய்வு: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை


யோகா, இயற்கை மருத்துவ படிப்பு செப்.23 முதல் கலந்தாய்வு: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை

1314485

இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு வரும் 23-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த 2 அரசு கல்லூரிகளிலும் 160 இடங்கள் உள்ளன. 16 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,500 இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்கள் உள்ளன.

யோகா, இயற்கை மருத்துவ பட்டப் படிப்பு (பிஎன்ஒய்எஸ்) ஐந்தரை ஆண்டுகள் கொண்டது.பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், 2024-25-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நடந்தது. இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவ, மாணவிகள் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு2,320 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,243 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு1,187 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,173 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.


இந்நிலையில், தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்களை அரும்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19-ம் தேதி மாலை வெளியிட்டார். தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி, இணை இயக்குநர்கள் பார்த்திபன், மணவாளன், மாணவர் தேர்வு குழு செயலர் கிருஷ்ணவேணி உடனிருந்தனர். தரவரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தின் அப்சர் பேகம் (கட்ஆஃப் 198.50), நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் கோவை மாவட்டத்தின் ஜெயசிவனிதா (கட்ஆஃப் 195) ஆகிய மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் யோகா, இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 23-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினர், 24-ம் தேதி பொது பிரிவினர், 26, 27-ம் தேதிகளில் நிர்வாகஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகள்போல, யோகா, இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினால் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 27.09.2024க்கு ஒத்திவைப்பு!!


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 27.09.2024க்கு ஒத்திவைப்பு!!

 


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 27.09.2024க்கு ஒத்திவைப்பு - Download Here

மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!!!

 மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!!!

 


மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!!! - Download Here

Friday, 20 September 2024

தைராய்டு நோயும்🦋... அதன் அறிகுறிகளும்⚠️... அறிந்து விழிப்புணர்வுடன்🧠 இருங்கள்..!


 தைராய்டு நோயும்🦋... அதன் அறிகுறிகளும்⚠️... அறிந்து விழிப்புணர்வுடன்🧠 இருங்கள


🥼 தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பியாகும். மூளை, இதயம் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்க தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளிவிடுகிறது.


ஹைப்போ-தைராய்டிசம் (Hypothyroidism) 


😓 மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்கப்படவில்லை என்றால் அது ஹைப்போ-தைராய்டிசம் ஆகும்.


அறிகுறிகள்:


📈 எடை அதிகரிப்பு


😴 சோர்வு


❄️ குளிர் உணர்வு


🚽 மலச்சிக்கல்


🧴 வறண்ட சருமம்


🎤 குரல் கரகரப்பு


😔 மனச்சோர்வு


ஹைப்பர்-தைராய்டிசம் (Hyperthyroidism) 


🔥 தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் ஆகும்.



அறிகுறிகள்:


📉 எடை இழப்பு


💦 அதிகப்படியான வியர்வை


🤲 கை - கால் நடுக்கம்


❤️ இதயத் துடிப்பு அதிகரிப்பு


🌙 தூக்கமின்மை


🩸 மாதவிடாய் கோளாறுகள்


கழுத்துக் கழலை (Goiter) 


🦠 தைராய்டு சுரப்பி வீக்கமடைவது கழுத்துக் கழலை எனப்படுகிறது.


காரணங்கள்:


🧬 ஆட்டோ இம்யூன் நோய்கள்


🧂 அயோடின் குறைபாடு


🦀 தைராய்டு புற்றுநோய்


🧬 மரபணு காரணிகள்


🤰 கர்ப்பம்


💊 சில மருந்துகள்


தைராய்டு பிரச்சனைகளை கண்டறிதல் 


🔍 தைராய்டு பிரச்சனைகளை கண்டறிய மருத்துவர் இரத்த பரிசோதனை, உடல் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்ற சில பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.


சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் 


💊💉 தைராய்டு பிரச்சனைகளுக்கான சிகிச்சை பிரச்சனையின் தன்மை மற்றும் காரணத்தை பொறுத்து மாறுபடும். இதில் மருந்துகள், அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும்.


தடுப்பு முறைகள்:


🧂 அயோடின் கலந்த உப்பை உணவில் பயன்படுத்தல்


🍽️ சமச்சீர் உணவு உண்ணுதல்


🏋️‍♂️ வழக்கமான உடற்பயிற்சி


🛌 போதுமான தூக்கம்


🧘‍♂️ மன அழுத்தத்தை நிர்வகித்தல்


இவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதை நிர்வகிக்கலாம். 


👨‍⚕️ தைராய்டு பிரச்சனை இருப்பதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். மேலே கூறியுள்ள அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டாலும் ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 IMG_20240919_092259

மதுரை உயர்நீதிமன்றத்தில்  மாண்புமிகு நீதியரசர். திருமதி விக்டோரியா கௌரி அவர்களால் வழங்கப்பட்ட 70 பக்க விரிவான அதிரடி தீர்ப்பின் படி அரசாணை 95 செல்லாது ... 10.03.2020-ற்கு முன்னர் உயர்கல்வி பயின்றவர்கள் பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு உத்தரவு.

INCENTIVE ALLOWED JUDGEMENT - Download Here


Chief Minister‘s Research Fellowship - 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000


Chief Minister‘s Research Fellowship - 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000

 



 

 முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister‘s Research Fellowship) – 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!

 



 

தினம் ஒரு மூலிகை - வெட்பாலை

 


Wednesday, 18 September 2024

ADMIN APP NEW UPDATE- 0.2.7 TNSED ADMIN APP NEW UPDATE- 0.2.7

 ADMIN APP NEW UPDATE- 0.2.7

TNSED ADMIN APP NEW UPDATE- 0.2.7

 IMG-20240917-WA0003

10th Tamil - Slow Learners Study Material

 Study Materials

10th Tamil - Slow Learners Study Material

 



SPD Proceedings புதிய உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை தெரிவு செய்து EMIS ல் பதிவு செய்ய உத்தரவு - SPD Proceedin

 - SPD Proceedings

புதிய உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை தெரிவு செய்து EMIS ல் பதிவு செய்ய உத்தரவு - SPD Proceedin


நடப்பு கல்வியாண்டில் 2024-2025 இல் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்று , இதுவரை EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் விவரங்கள் இணைப்பு -1 இல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் , இணைப்பு - 2 இல் பதிவு செய்த ஆசிரியர்களின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது . அப்பட்டியலில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியில் இருந்து பணி மாறுதல் அல்லது பணி நிறைவு பெற்றிருப்பின் அந்த ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை 250 மாணவர்களுக்கு 1 உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தெரிவு செய்து 16.09.2024 முதல் 23.09.2024 ஆம் தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Click Here to Download - Career Guidance Teacher Enrollment - SPD Proceedings - Pdf

Download eSR - உங்கள் eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - eSR Download & Edit Procedure - Pdf

 

Download eSR - உங்கள் eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - eSR Download & Edit Procedure - Pdf



esr


உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை...

Please ensure your eSR is updated and the details are correct.

உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை

Login to Portal

https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/

and find the Part-l eSR under Home -> Other Applications...


Click Here to Download - eSR Download & Edit Procedure - Pdf

களஞ்சியம் செயலி மூலமாக எவ்வாறு e-SR Download & View செய்து பார்ப்பது? - வீடியோ

 களஞ்சியம் செயலி மூலமாக எவ்வாறு e-SR Download & View செய்து பார்ப்பது? - வீடியோ

 IMG_20240917_083141

NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்


NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்

 images%20(45)

தேசிய அளவிலான அடைவுத்தேர்வு NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர், 2024 அறிவிப்பு - தகவல் கையேடு வெளியீடு..

 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர், 2024 அறிவிப்பு - தகவல் கையேடு வெளியீடு..

 IMG_20240917_220135

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர், 2024 அறிவிப்பு - தகவல் கையேடு வெளியீடு...

 CTET - DECEMBER, 2024 - CENTRAL TEACHER ELIGIBILITY TEST INFORMATION BULLETIN...

CENTRAL TEACHER ELIGIBILITY TEST

Duration of Online Application: 17.09.2024 to 16.10.2024

Last date for submission of online Application: 16.10.2024 (Before 11:59PM)

Last date for submission of fee: 16.10.2024 (Before11:59PM)

Date of Examination: 01st December, 2024

 Click Here to Download CTET Information Bulletin

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு... IMG_20231015_141851

.

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு...

IMG_20231015_141851

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு...

Std 3, 5 and 8 - National Achievement Survey 2015 - Question Papers Collection - Download here

Friday, 13 September 2024

PG Assistant - 3 months Post Continuance Order

 


PG Assistant - 3 months Post Continuance Order

IMG_20240913_120205

School Education Department - Temporary Posts Sanctioned - Post Graduate Assistant 47 posts Further Continuance Orders awaited from Government - Certifiate for a Period of 3 months from 01-09-2024 Issued - Regarding

 PG Assistant - 3 months Post Continuance Order

Download Here

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப கல்வித்துறை உத்தரவு

 


கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப கல்வித்துறை உத்தரவு

 


கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப கல்வித்துறை உத்தரவு  - Download Here

TET வழக்கு - விசாரணை தேதி மாற்றம்

 விசாரணை தேதி மாற்றம்

TET வழக்கு - விசாரணை தேதி மாற்றம்

பதவி உயர்வுக்கு TET தேவை வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை.

TET case 15.10.2024 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.

IMG-20240913-WA0021

IMG-20240913-WA0022