Friday 20 September 2024

தைராய்டு நோயும்🦋... அதன் அறிகுறிகளும்⚠️... அறிந்து விழிப்புணர்வுடன்🧠 இருங்கள்..!


 தைராய்டு நோயும்🦋... அதன் அறிகுறிகளும்⚠️... அறிந்து விழிப்புணர்வுடன்🧠 இருங்கள


🥼 தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பியாகும். மூளை, இதயம் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்க தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளிவிடுகிறது.


ஹைப்போ-தைராய்டிசம் (Hypothyroidism) 


😓 மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்கப்படவில்லை என்றால் அது ஹைப்போ-தைராய்டிசம் ஆகும்.


அறிகுறிகள்:


📈 எடை அதிகரிப்பு


😴 சோர்வு


❄️ குளிர் உணர்வு


🚽 மலச்சிக்கல்


🧴 வறண்ட சருமம்


🎤 குரல் கரகரப்பு


😔 மனச்சோர்வு


ஹைப்பர்-தைராய்டிசம் (Hyperthyroidism) 


🔥 தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் ஆகும்.



அறிகுறிகள்:


📉 எடை இழப்பு


💦 அதிகப்படியான வியர்வை


🤲 கை - கால் நடுக்கம்


❤️ இதயத் துடிப்பு அதிகரிப்பு


🌙 தூக்கமின்மை


🩸 மாதவிடாய் கோளாறுகள்


கழுத்துக் கழலை (Goiter) 


🦠 தைராய்டு சுரப்பி வீக்கமடைவது கழுத்துக் கழலை எனப்படுகிறது.


காரணங்கள்:


🧬 ஆட்டோ இம்யூன் நோய்கள்


🧂 அயோடின் குறைபாடு


🦀 தைராய்டு புற்றுநோய்


🧬 மரபணு காரணிகள்


🤰 கர்ப்பம்


💊 சில மருந்துகள்


தைராய்டு பிரச்சனைகளை கண்டறிதல் 


🔍 தைராய்டு பிரச்சனைகளை கண்டறிய மருத்துவர் இரத்த பரிசோதனை, உடல் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்ற சில பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.


சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் 


💊💉 தைராய்டு பிரச்சனைகளுக்கான சிகிச்சை பிரச்சனையின் தன்மை மற்றும் காரணத்தை பொறுத்து மாறுபடும். இதில் மருந்துகள், அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும்.


தடுப்பு முறைகள்:


🧂 அயோடின் கலந்த உப்பை உணவில் பயன்படுத்தல்


🍽️ சமச்சீர் உணவு உண்ணுதல்


🏋️‍♂️ வழக்கமான உடற்பயிற்சி


🛌 போதுமான தூக்கம்


🧘‍♂️ மன அழுத்தத்தை நிர்வகித்தல்


இவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதை நிர்வகிக்கலாம். 


👨‍⚕️ தைராய்டு பிரச்சனை இருப்பதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். மேலே கூறியுள்ள அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டாலும் ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

No comments:

Post a Comment