Monday 20 January 2014

கால முறை ஊதியம் கோரி சத்துணவுப் பணியாளர்கள் ஜன. 27-ல் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம், தேசிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன. 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை, ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

தமிழக முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட ஒரு விடுதிக்கு ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்: வேண்டுமென்றே புறக்கணிக்கிறதா இஸ்ரோ?

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, மூன்றாவது தளம் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். பிரெஞ்ச் கயானாவுக்கு நிகராக, ராக்கெட் ஏவுவதற்கான அனைத்து சாதக அம்சங்களையும் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ புறக்கணிப்பது விண்வெளி விஞ்ஞானிகளை மட்டுமின்றி தமிழக மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்!

கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்க முறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து, இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று, மென்பொருள் அடிப்படையிலான ஒரு வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

அரசு அறிவித்த திட்டங்களை ஒரு மாதத்துக்குள் முடிக்க கெடுபிடி

தமிழக அரசின் சார்பில், நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய, நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை, வரும் பிப்ரவரி கடைசிக்குள் முடிக்க வேண்டும்' என, உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

"டிரான்ஸ்பர்"க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்

''தொடக்கக் கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்கள், புலம்பி தவிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார், அந்தோணிசாமி.
''விவரமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.

''கடந்த, 2007-2008ம் ஆண்டில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தொலைதூர மாவட்டங்களில், 7,000 பேர் பணியில் சேர்ந்தாங்க...

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு

"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட "நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.

இனி கல்லூரி முதல்வர் பதவியில் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம் - புதிய விதி

கல்லூரி முதல்வர்களின் பதவி காலத்தை அதிகபட்சம் 5இலிருந்து 10 வருடங்கள் வரை நீட்டிக்க யு.ஜி.சி. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தனது முந்தைய விதியில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Sunday 19 January 2014

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம்
ஆர்.டி.இ. எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் (வெயிட்டேஜ் மதிப்பெண்) தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகின்றனர்.

ஊதிய நிர்ணயம்


SSLC - MATHS ONE MARK QNS & ANS

SSLC - MATHS ONE MARK QNS & ANS CLICK HERE...

PREPARED BY MR. M.SENTHILNATHAN, B.T.ASST, GHSS, THIRUPOONTHOORUTHI

புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை

அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச் சுற்றுலாவின் போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.

Wednesday 8 January 2014

இந்தியாவின் நேரம் மாறுகிறது...

பெரிய நாடுகளில் இருப்பது போல நம் நாட்டுக்கும் இரண்டு விதமான நேரங்கள் பின்பற்றபட உள்ளன. (இது எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.) இந்தியாவின் நேரத்தை ஐ.எஸ்.டி., (இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்) என்று குறிப்பிடுவர். உலகளவில் நேரத்தை கணக்கிடுவதற்கு "கிரீன்விச் மீன் டைம் முறை" (ஜி.எம்.டி) பயன்படுத்தப்படுகிறது.

ஆன் - லைனிலேயே இனி மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கலாம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் களின் உண்மைத் தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது அரசுத் தேர்வுத் துறை.

நிதித்துறை - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருணைத் தொகை குறித்த அரசாணை வெளியீடு

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைப்பு

இன்று (07.01.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் பிற்பகல் 12.30 மணிக்கு 37வது வரிசையாக விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான  இருதரப்பு விசாரணை அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.

Sunday 5 January 2014

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?

ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?

ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு சுறுசுறுப்பு

லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.

Monday 30 December 2013

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.

Wednesday 18 December 2013

வருங்கால வைப்பு நிதி 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது.

TNTET WEIGHTAGE FOR SECONDARY GRADE TEACHERS

a) There shall be 100 marks in total as full marks.
b)The computation of 100 marks will be in the following manner.
i) +2 15 marks
ii) D.T.ed/ D.E.Ed: 25 marks
iii) TET: 60marks
c) Marks shall be given for item i,ii,iii of clause (b) in the manner mentioned here under.
FOR +2