Saturday 7 December 2013

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன்லைனில் பதிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.

பிளஸ் 2; 10ம் வகுப்பிற்கு விடை தாளில் விசேஷ ஏற்பாடு

"வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு வாடகை ஜெனரேட்டர் வசதி

பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tuesday 3 December 2013

சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கிப் புறப்பட்டது "மங்கள்யான்"

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட "மங்கள்யான்" செயற்கைக்கோள், புவிவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.

Tuesday 26 November 2013

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.

லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.

278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு

நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Monday 25 November 2013

TNPSC 2 GROUP HALL TKT DOWNLOD CLIK HERE

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

bananas-for-sleepதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

ஐநாவில் பேசிய பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி

1453288_516430598452474_1660979791_nஅமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…

சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.

பாரதிதாசன் பல்கலை: முடிவுகள் வெளியீடு

தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது

இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Sunday 24 November 2013

Advertisement

14hrs : 33mins ago
சென்னை:சுப்ரீம் கோர்ட் முதல், கீழமை கோர்ட்கள் வரை, "லோக் அதாலத்' மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும், ஒன்பது லட்சம் வழக்குகளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.காஷ்மீர் ...
Comments (23)

உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி

மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை?

கரூர் அருகே பசுபதிபாளயைம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ராகினி, 13. இவர், வடக்கு பசுபதிபாளயைம் பகுதியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ராகினி, அன்றிரவு, 7.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3,625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் தயார்: பதவி உயர்வு அறிவிக்காதது ஏன்?

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும் பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை

தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (2009) அமல்படுத்தியது. இதன்படி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தகுதித் தேர்வு நடத்துகிறது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியாகியுள்ளன.

குரூப்-1 தேர்வுக்கான வயதுவரம்பு உயர்வு? - தமிழக அரசு தீவிர பரிசீலனை

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இந்தத் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது.

பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

அரையாண்டு தேர்வு 10-ஆம் வகுப்பு டிசம்பர் 12 முதலும், பிளஸ் 2 டிசம்பர் 10 முதலும் தொடங்குகிறது

அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

பத்தாம் வகுப்பு அட்டவணை

டிசம்பர் 12 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 13 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - திங்கள்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மாணவி பலியான விவகாரம்: உதவி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.