Friday 13 September 2013



மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Wednesday 4 September 2013


முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன், ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும், ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு

ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.

ஆசிரியர் தினம் : தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு திமுக எதிர்ப்பு..

ஓய்வூதிய நிதியை தனியார் பங்குகளில் முதலீடு செய்யும் அம்சத்தை நீக்க வலியுறுத்தல். மக்களவையில் மசோதா மீதான விவாதத்தில் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

ஓய்வூதிய மசோதா மீதான விவாதத்தில் அமளி : மக்களவையும் ஒத்திவைப்பு

மக்களவையில் இன்று ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Results of Departmental Examinations - MAY 2013


Results of Departmental Examinations - MAY 2013
(Updated on 03 September 2013)
Enter Your Register Number :                                                         

Tuesday 3 September 2013

REVISED & UPDATED Syllabus tnpsc


ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு!

ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு


தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு


5ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாத எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

5 ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாமல் இடையில் நிறுத்திய பாலிசிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று எல்ஐசி தென்மண்டல பொது மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தொழில் வரி விவரங்கள்

ரூ.21000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு - இல்லை
ரூ.21001 முதல் 30000 வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.95
ரூ.30001 முதல் 45000 வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.240
ரூ.45001 முதல் 60000 வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.470

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்கிறது

தொடர்ச்சியாக பண்டிகை தினம் வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

''தாய்'' திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவு

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு: தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (தாய்) மூலம் அனைத்து கிராமங்களிலும்

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..

நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

விருதுகள் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழக அரசால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ல் சென்னையில் விழா நடத்தி கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி அரசால் கெளரவிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதிவாய்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன. 

தொடக்க கல்வித்துறையில் 115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

Wednesday 28 August 2013


டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்

டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. "தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

டைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம்; தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம்


8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

 
தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

GRP-IV ANS KEYS Tentative Answer Keys


Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
 (Date of Examination:25.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click Here for Tentative Answer Key

Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Click Here for Tentative Answer Key Paper I and Paper II

Monday 26 August 2013


மாரடைப்பின் போது முதலுதவி குறிப்புகள்

உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.‌என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.