Saturday, 4 April 2015
இனி மாதத்தில் 2 சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை.. நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வங்கி ஊழியர்களின் பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாட புத்தகங்கள் விலை கடும் உயர்வு
தமிழகத்தில், பாடப் புத்தகங்களின் விலையை அரசு உயத்தியுள்ளது. வரும் கல்வியாண்டுக்காக, 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 3.17 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை
பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
Tuesday, 31 March 2015
பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால்பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்ட உத்தரவு: ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஎட் பயில்கின்றனர்.
9ம் வகுப்பு மாணவர்களை வடிகட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வடிகட்ட, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
1986-87 வரை DTEd படித்தவர்களுக்கான அரசாணை
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?
இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில்,
- ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள்அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Probability of getting 3 heads and 3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.
- 5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண் 38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்டநாற்கரமானது ஒரு சாய்சதுரம் என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7) are the vertices of a rhombus." என்று உள்ளது.
TET வழக்கு விபரம்!
Mutual Transfer Willing Form Details
Please Contact Teachers - Via Email ID Only.
- DEE - BT Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DEE - SG Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - HS & HRSS HM | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - PG Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - BT Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - SG Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
Transfer Applications
Sunday, 29 March 2015
CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!
CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
12th Standard March 2015 - Tentative Key Answer Download
- Zoology
- 12th Standard March 2015 Official Key Answer Download (Zoology-Tentative) - Click Here
- Commerce
- 12th Standard March 2015 Official Key Answer Download (Commerce-Tentative)- Click Here
- Computer Science
- 12th Standard March 2015 Official Key Answer Download (Computer Science) - Click Here
- Maths
- 12th Standard March 2015 Maths 1 Mark Answers (Tentative - English Medium) | A.Immanuvel Maduram Thangiah - Click Here
- Chemistry
- 12th Standard March 2015 Chemistry 1 Mark Answers (Tentative - Tamil & English Medium) - Click Here
- Physics
- 12th Standard March 2015 Physics 1 Mark Answers (Tentative - English Medium) | Mr. Ravisankar - Click Here
- 12th Standard March 2015 Physics 1 Mark Answers (Tentative - English Medium) | Mr. B.Elangovan- Click Here
- 12th Standard March 2015 Physics Answers (Tentative - Tamil Medium) | Mrs.A.ABIDHA BEGUM- Click Here
- Accountancy
- 12th Standard March 2015 Accountancy Key Answers (Tentative - Tamil Medium) | Mr.M.MuthuSelvam - Click Here
- EMA
- 12th Standard March 2015 EMA Key Answers (Tentative - Tamil Medium)| GHSS Arimalam - Click Here
அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு
மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
Friday, 27 March 2015
அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு.
தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமைச் செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!
தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதியகுழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொப்பை குறைய - (to burn belly fat) என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க...
பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.
Wednesday, 25 March 2015
Tuesday, 24 March 2015
பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை
Subscribe to:
Posts (Atom)