Saturday 22 February 2014

கல்விக்கடன் மறுப்பா? ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்

"வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் ரிசர்வ் வங்கியை அணுகலாம்" என சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பது எப்படி? முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு உரிய பல்வேறு அறிவுரைகளையும் சுற்றறிக்கையாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பி உள்ளது.

சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை அவசியமில்லை : மத்திய அரசு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கு ‘வாட்ஸ்- அப்’-ஜ பேஸ்புக் வாங்கியதால் கோடீஸ்வரர்களான முதலீட்டாளர்கள்

நிலையான தொலைபேசி பயன்படுத்தப்பட்ட காலத்தை விட, பேஜர், மொபைல் போன் என அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள், உள்ளங்கையில் உலகத்தை சுருங்கச்செய்தது. அதிலும் மொபைல் போன்களில் இன்டர்நெட் பயன்பாடு வந்த பிறகும், 3ஜி மொபைல்கள் வரத்தொடங்கிய பிறகும் தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி பெற்றது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கேன்வாஸ் ஷு மட்டுமே பயன்படுத்த ஆணை

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான சீருடையின் ஒரு பகுதியாக கேன்வாஸ் ஷ¤க்களையே பயன்படுத்த வேண்டுமென சி.பி.எஸ்.இ., அமைப்பு, தனது இணைப்பு பள்ளிகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

6 கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Friday 21 February 2014

தேர்தல் ஆணையம் அதிரடி! விரைவில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை!

நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 16-வது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகள் உட்பட அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தினமலர்

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை

டி.இ.டி., தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்  அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய  (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர். 

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு துறை கவனக்குறைவு

தேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல்ரோல்' வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

18 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள 18 மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களை பத்வி உயர்வு / பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கம் புரம் தலைமையாசிரியர் இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு

* தும்பகுளம் தலைமையாசிரியர் தேனி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு

*மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* உசிலம்ப்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு

டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இதுகுறித்து மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் அளித்த அறிக்கையில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

Wednesday 19 February 2014

இந்த தகவலை எல்லாருக்கும் பகிருங்கள் நட்புகளே...!!

Share !!

அம்மா உணவகம் திறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது

அம்மா உணவகம் திறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது: சர்க்கரை பொங்கல் வழங்கி
கொண்டாட்டம்...http://www.maalaimalar.com/2014/02/19101821/amma-food-stall-opened-year-th.html
பிப்ரவரி 19: புகழ்பெற்ற மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி பிறந்த தினம்..

தமிழகத்தின் 11-வது மாநகராட்சியாக தஞ்சையும், 12-வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் இன்று முதல் அந்தஸ்து உயர்த்தப்பட்டன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தஞ்சை: தமிழகத்தின் 11-வது மாநகராட்சியாக தஞ்சையும், 12-வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் இன்று முதல் அந்தஸ்து உயர்த்தப்பட்டன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படும் என அறிவித்தார்.

மேலும் படிக்க: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80309

வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?​​

இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 55 சத வீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம்

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.

தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

583 முதுகலை ஆசிரியர்கள் நியமனம், 7ஆசிரியர்களுக்கு முதல்வர் இன்று பணி நியமனம் வழங்குகிறார்


ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

கை விரித்தார் கருணாநிதி... கை கொடுப்பாரா ஜெயலலிதா? 45 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?

அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்துவது வாடிக்கை. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதிலும், புதிய பள்ளிகளை திறப்பதிலும், ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும் தீவிரம் காட்டுவர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு : குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் உத்தரவு

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களை மாநில அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்ட

Tuesday 18 February 2014

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியல் தயார்

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014) சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

இது குறித்து தமிழ்நாடு அசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள் கூறியாதவது: பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது. அண்மையில் இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது. 

9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியில் சலுகை

நாடு முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், கல்விக் கடனுக்கான வட்டி செலுத்துவதில் மத்திய அரசு சலுகையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்பு:கல்விக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. 31.03.2009 ஆண்டு வரை கல்விக் கடன் பெற்றவர்கள் மற்றும் 31.12.2013 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இது பொருந்தும்.