Sunday 16 February 2014

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். 

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்: இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்'

தமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய, -மாநில அரசுகளின் பங்களிப்புடன், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா

ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வசுந்தரா ராஜே, அரசு பள்ளிகளில் சென்று திடீர் ஆய்வு நடத்தியதுடன், மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, அவர்களுக்கு பாடமும் நடத்தினார்.
ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்தது. பா.ஜ., இதுவரை இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, வசுந்தரா ராஜே முதல்வராக பொறுப்பேற்றார்.இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள வசுந்தரா, மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் நற்பெயரை தக்க வைத்து கொள்ள, மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை

நிறுத்தி வைத்த பதவி உயர்வு: உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

தொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில், ஆண்டுதோறும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.

பள்ளிக்கல்வி - அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / ஆங்கிலோ இந்தியன் / ஆசிரியர் கல்வி பயிற்சித் தேர்வு - முன் பணி / தேர்வுகால பணிகளில் ஈடுபடும் ஆசிரிய்ர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு வழங்கப்படும் உழைப்பூதியம் / மதிப்பூதியம் 15% உயர்த்தி வழங்குதல் - தமிழக அரசு ஆணை வெளியீடு

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, 15 ஆண்டு கழித்தே வேலை வாய்ப்பு?

''தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2013 - -14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது, 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்'' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித் துறையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்களில் மாற்றம், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டதாரிஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் மற்றும் டிஇடி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ்2 , டி.டி.எட்., மற்றும் டி.இ.டி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., விரைவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!

SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக, மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு

Friday 14 February 2014

தமிழக பள்ளிக் கல்வியின் நிலை என்ன?- ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

அண்மையில் ப்ரதம் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வியின் நிலை அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது. கிராமங்களில் உள்ள 5-ம் வகுப்பு மாணவர்களில் 31.9 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடைப் பகுதியை வாசிக்க முடிந்ததாகவும், 14 சதவீதம் பேர் மட்டும் 3 இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்க முடிந்தது என்றும் அதில் தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த இரு கற்றல் விகிதங்களும் தேசிய அளவில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் 47 சதவீதமாக உள்ளன. (பார்க்க படம் 1, 2)

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731 கோடி

மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்கிட, 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த திட்டம்

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.

தற்செயல் விடுப்பு விதிகள்

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல்
விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும்
போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம்.
(அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

மாவட்ட கல்வி அலுவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

அறிவிப்பு வெளியான நாள்:14.02.2014.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:14.03.2014.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் 8.6.14.முற்பகல்.
பணியிடங்களின் எண்ணிக்கை 9.

சுயநிதி பள்ளிகளின் பெயர் மாற்றம், அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளிஎன்று அழைக்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்த்து வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை.சலுகைமதிப்பெண்-தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்த்து வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை.சலுகைமதிப்பெண்-தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.

Wednesday 12 February 2014

நூறாவது நாளை எட்டிய இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான விண்கலம்.

நூறாவது நாளை எட்டிய இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான விண்கலம்...http://www.maalaimalar.com/2014/02/12005642/Indias-Mars-mission-successful.html

திருமணம் என்பது சிக்கலா?

திருமணம் என்பது சிக்கலா?

என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா? ‪#‎Sadhguru‬

ஐ.பி.எல். சூதாட்டம்: டோனி-ரெய்னாவின் தொடர்பை அம்பலமாக்கிய சென்னை புரோக்கர்கள்

ஐ.பி.எல். சூதாட்டம்: டோனி-ரெய்னாவின் தொடர்பை அம்பலமாக்கிய சென்னை புரோக்கர்கள்...http://www.maalaimalar.com/2014/02/12124807/IPL-Gambling-dhoni-Reina-expos.html

அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி செவிலியர்கள் அனைவருக்கும் உதவித்தொகை:

அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி செவிலியர்கள் அனைவருக்கும் உதவித்தொகை: அரசாணை வெளியீடு...http://www.maalaimalar.com/2014/02/12025856/scholarship-for-all-nurses-tra.html
TNPSC | TAMIL | TNPSC GENERAL TAMIL UNDER 20 HEADINDS MINI MATERIALS 56 PAGES FOR VAO - http://ow.ly/txvuX

சார்லஸ் டார்வினின் பிறந்த தினம் இன்று!

பிப்ரவரி 12: மனித இனத்தின் தோற்றத்தை வரையறுத்த சார்லஸ் டார்வினின் பிறந்த தினம் இன்று!

டார்வின் தினமாகவும் இன்று கொண்டாடப்படுகிறது.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number Click here


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Click here for Paper I           
Click here for Paper II           

Dated: 11-02-2014

Member Secretary

தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்படும் ரூ.150/-ஐ வருமான வரி 80D பிரிவின் கீழ் முழுமையான வரிச் சலுகை பெறலாம் என்பதனை விருதுநகர் மாவட்ட கருவூலம் ஏற்பு

இதுகுறித்து இன்று காலையில் நமது வலைதளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அரசு கடிதத்தினை வெளியிட்டோம். இதையடுத்து அந்த கடித நகலினை கொண்டு விருது நகர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சார்ந்த மாவட்ட கருவூல அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அம்மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் அவர்கள் தெரிவித்தாவது: 

பிப்.25ல் உள்ளிருப்பு போராட்டம், பிப்.26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும், மறுநாள் பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேரில் முறையீடு

முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும் இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும் எனகோரிக்கை வைத்தனர்.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number



TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Click here for Paper I           
Click here for Paper II           

Dated: 11-02-2014

Member Secretary

பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

பிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத்துறை இணைய தளம் வழியாக, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவிப்பில், '13 முதல், 16 வரை, www.tndge.in என்ற தேர்வுத்துறை

மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்: பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்

பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல மாணவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அதைப் போக்குவதற்காக ஆர்எம்எஸ்ஏ(மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம்),

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து  இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், இந்த 45 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய சலுகை - மத்திய அரசு ஒப்புதல்

2014ம் ஆண்டில் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முதல், அனைத்து பிரிவினருக்கும், கூடுதலாக இரண்டுமுறை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் வாய்ப்புகளை வழங்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

* பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை.
* 17 கூடுதல் கட்டணம் கொண்ட பிரிமியம் ரயில், 38 புதிய விரைவு ரயில்கள் விடப்படும்.
* தீ விபத்தை தடுக்க ரயிலில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்படும்.
* ரயில் சமையலறையில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படும்.
* குறிப்பிட்ட ரயில்களில் இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்.

Tuesday 11 February 2014

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பட்டதாரிகள் அதிருப்தி

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் களால் திறமை மிகுந்த பட்டதாரிகள் அதிகளவு பாதிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தகுதித் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய

தொடக்க, நடுநிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை - dinamani

கடந்த ஆண்டிற்கான (2013) "ஆசர்கருத்துத் திரட்டல் (சர்வே),இந்தியாவின் 550 மாவட்டங்களில் உள்ள 16,000 கிராமங்களைச் சேர்ந்த3.3 லட்சம் குடும்பங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானகுழந்தைகளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.குழந்தைகளிடம் மட்டுமல்லஅவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில்

பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம்

அடுத்த கல்வியாண்டின் (2014-15) முதல் பருவத்துக்கான புத்தகங்களில்பிழை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.ஏற்கெனவே இந்தப்புத்தகங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

SECTION 87A வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே கருவூல அலுவலர் வழிகாட்டு நெறிமுறையில் தகவல்

தனிநபரின் மொத்த வருமானத்தை 5 லட்சத்துக்குள் என கருதாது வரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கில் கொண்டு  அது 5 லட்சத்துக்குள்  இருந்தால் ரூ-2000/- கழிவு பெறலாம்.என திருவண்ணாமலை சார் கருவூல அலுவலர்அதன் வரையறுக்குட்பட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.