Thursday 12 December 2013

வட்டார மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், மேலும் 1000 வட்டார வளமைய பயிற்றுநர்களை, ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்?

2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

எஸ்.எஸ்.எல்.சி.,மாணவர்களுக்கு முப்பருவமுறை அமலாகுமா?

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசாணைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள்


1G.O.MS No-42-Dated-10.01.62
2.G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971
3.GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT Dt.17 NOV-1971
4.G.O.MS No107 EDN-Dated-20.01.1976
5.G.O.MS NO-559/FINANCE ,DATED-18/08/81
6 GOVT MEMORANDUM NO-22274/4/72-73 /EDUCATION DEPT/Dt-25 APRIL-1973

 PLS CLICK HERE  TO DOWN LOAD ABOVE ORDER COPIES


7 G.O.MS No-624/E2/ EDN-Dated-13/07/92

 PLS CLICK HERE  TO DOWN LOAD ABOVE ORDER COPY

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு, டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்ப்பார்ப்பு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர்எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில்,

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை தனி வாகனத்தில் கொண்டு செல்ல முடிவு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது. மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி" வகை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது. மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி" வகை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன.

Saturday 7 December 2013

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

* 21 நாட்கள் ML போட்டா ஒரு நாள் EL கழிக்கப்படும்.

குரூப் - 2' தேர்வு விடை வெளியீடு (Tentative Answer Keys)

 Sl.No.
Subject Name
 (Date of Examination:01.12.2013 FN)

COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II SERVICES)
1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th December 2013 will receive no attention.

12, 10-ம் வகுப்பு: பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்!

தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000 

9,25,000 கி.மீ பயணம் செய்து புவியீர்ப்பு மண்டலத்தை கடந்தது மங்கல்யான்

செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன்லைனில் பதிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.

பிளஸ் 2; 10ம் வகுப்பிற்கு விடை தாளில் விசேஷ ஏற்பாடு

"வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு வாடகை ஜெனரேட்டர் வசதி

பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tuesday 3 December 2013

சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கிப் புறப்பட்டது "மங்கள்யான்"

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட "மங்கள்யான்" செயற்கைக்கோள், புவிவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.

Tuesday 26 November 2013

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.

லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.

278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு

நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Monday 25 November 2013

TNPSC 2 GROUP HALL TKT DOWNLOD CLIK HERE

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

bananas-for-sleepதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

ஐநாவில் பேசிய பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி

1453288_516430598452474_1660979791_nஅமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…

சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.

பாரதிதாசன் பல்கலை: முடிவுகள் வெளியீடு

தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது

இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.