Wednesday 6 November 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை 17ஆம் தேதி சுமார் 2,62,187ம், இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும் எழுதினர். இன்று வெளிடப்பட்ட தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்

"ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்" என 7,000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களில் 27,092 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) மாலை வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் (ஆகஸ்ட் 18) தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.

Tuesday 5 November 2013


Sportsசல்யூட் சச்சின்! : கோல்கட்டாவில் கொண்டாட்டம் 
ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 199வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கோல்கட்டா வந்த சச்சினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின். இவர், வெஸ்ட்
 
மேலும் படிக்க...

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; நீண்டநாள் கனவு நிறைவேறியது 
6hrs : 31mins ago
Top news
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் ...
Comments (96)

19hrs : 38mins ago
சென்னை : 'வங்கக் கடலில் உருவாகியுள்ள, இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், இடியுடன் கூடிய மழையும், கடலோரப் பகுதிகளில், கனமழையும், சில இடங்களில், மிக கனமழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் ...
Comments (22)

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-06.11.2013


உயர் தொடக்கநிலை-08.11.2013

மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-12.11.2013

உயர் தொடக்கநிலை-19.11.2013

EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள்

1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.
2. மாணவன் பள்ளியில் பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
3. ஒரு மாணவனுக்கு இரண்டு பள்ளிகளில் பெயர் இருக்க முடியாது. அப்படி இருப்பின் உடனே கண்டு பிடித்து விடலாம். ஆகவே தலைமை ஆசிரியர்கள் 100% சரியான விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும்.

வெளிநாட்டுக் கல்வியில் இந்தியா: சில துளிகள்

2 - வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா பெற்றுள்ள இடம்

10.22 லட்சம் - ஒரு இந்திய மாணவன் ஒரு வருடத்திற்கு சராசரியாக வெளிநாட்டில் செலவழிக்கும் தொகை

27,000 கோடி - ஒரு வருடத்திற்கு இந்திய மாணவர்கள் செலவழிக்கும் தொகை.

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு

அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏவுகணையில் இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான் செயற்கைக் கோள்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் அலுவலக அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.

Sunday 3 November 2013

டெங்கு

இன்று

  • பனாமா விடுதலை தினம்(1903)
  • பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
  • பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
  • அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
  • போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)

நாட்டின் நிதி ­பற்­றாக்­குறை ரூ.4.12 லட்சம் கோடியை எட்­டி­யது

விளையாட்டு மலர்



Sportsரோகித் இரட்டை சதம் : கோப்பை வென்றது இந்தியா: பால்க்னர் சதம் வீண்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள்
 
மேலும் படிக்க...

vaangamattean lanjjam


கா. பாலசுப்ரமணியன்,quotes இவ்வளவு பேர் என்னை வாழ்த்துவார்கள் என நான் நினைக்கவே இல்லை. அப்படி நான் ஒன்றும் பெரிதாக செய்யவும் இல்லை. ஆனால் வாழ்த்திய போன்களின் எண்ணிக்கையால் நான் புளங்காகிதம் அடைந்தேன். பணியில் நேர்மையுடனே நான் ...

காடுவரை பிள்ளை,கடைசி வரை ஹரி.

Nijak Kadhai
கலைந்த தலை செருப்பில்லாத கால்கள். அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம். யார் இந்த ஹரி. மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர். சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய ...

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் oru paarvai

Pokkisam
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து அறுபத்தைந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம். பட்டுக்கோட்டையில் இருந்து நாகை போகும் வழியில் 35வது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சுமார் 45 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சரணாலயம். 1995ம் ...

செந்தூர் முருகன் கோயிலிலே! இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

Special Newsதிருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா பிரசித்தம். முருகப்பெருமானின் அருமை பெருமையைத் தெரிந்து கொண்டு அங்கு செல்லலாமே!கடலில் கிடந்த கந்தன்:திருச்செந்தூர் முருகப்பெருமானை அவனுடைய அடியார்கள் "ஆறுமுகநயினார்' என்று அழைப்பர். அப்பெருமான் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார்.17ம் நூற்றாண்டின் ...

General Newsசபரிமலையில் மண்டலகால கவுண்டவுன் தொடக்கம்: இன்னும் 13 நாட்கள்...
நாகர்கோவில்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல சீசன் நவ.16-ல் தொடங்குகிறது. லட்சக்கணக்கில் திரண்டு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மூன்று மாதங்களாக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீசனுக்கு முன்னர் பணிகளை முடிக்க அரசு இயந்திரங்கள் ...மேலும் படிக்க

எளிதாகிறது மாணவ விசா நடைமுறை


19hrs : 39mins ago
சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், ...
Comments (87)

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம்

மத்திய அரசு ஊழியர்களின், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, குரூப் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றில் பலன் பெறுவதற்கு, தனித்தனியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றி, ஒரே விண்ணப்பமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 2013 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 3 மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான  அகவிலைப்படி 10% முதல் 12% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ (NOTA) பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு

பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம் ‘கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.