Friday 17 May 2013


பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் சார்பான அறிவுரைகள்

7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியருக்கு ரூ.1500 ஊக்குவிப்புத் தொகை - முதலமைச்சர் உத்தரவு

இலவச திட்டங்களுக்கு வசூல்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - நாளிதழ் செய்தி

அரசின் இலவச திட்டங்களுக்கு, மாணவர்களிடம் பணம் வசூலித்த தலைமை ஆசிரியரை, தற்காலிக பணி நீக்கம் செய்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் தமிழைக் கௌரவித்த ரஷ்ய அதிபர் மாளிகை!

Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)

மா.க.ஆ.ப.நி- 2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3 சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்தவும், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆசிரியர்களுக்கு 1 நாள் 18.5.13 அன்று நடத்தவும் உத்தரவு.

குறிப்பு : ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தவொரு பயிற்சி மையத்திலும் ஆசரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCERT - IX STD 2 DAYS CCE TRAINING FOR ALL SUBJECTS TRS ON MAY 23 & 24 / 27 & 28 / 29 & 30 AT 3BATCHES REG - PROC CLICK HERE...

SCERT - IX STD 1 DAY CCE TRAINING FOR ALL HIGH / HIGHER SEC HMs ON 18.05.2013 REG - PROC CLICK HERE...

SCERT - IX STD CCE TRAINING TIME TABLE (9.30 TO 5.30PM) CLICK HERE...

SCERT - IX STD CCE RPs TRAINING REG - PROC CLICK HERE...


பாடநூல் கழகம் பெயர் மாற்றம்

பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாடநூல் கழகம் இனிமேல்,கல்வியியல் கழகம் என்ற பெயரில்

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்

2013-2014ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு ஆரம்ப கல்வி பிரிவு தொடங்கப்படும்.

2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக முதல்வர் உத்தரவு.

தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 54 தொடக்கக் பள்ளிகள் துவக்கவும், அப்பள்ளிகளுக்கு தேவைகேற்ப ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தவும்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள்+24 பள்ளி தேர்வு நாட்கள் =207 கணக்கீடு

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 210 வேலைநாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்று உள்ளூர் விடுமுறை நாட்கள், 24 பள்ளி தேர்வு நாட்கள் போக மீதம் 183 நாட்கள் கற்பித்தல் நாட்களாகும்.

உதவி செஇக


1108 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்

சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது,
பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது

2013 - 14ம் கல்வியாண்டு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் நடைபெறுவதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட CEO அலுவலகத்திலேயே நடத்த இயக்குநர் உத்தரவு.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் கோரிக்கை

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர் மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது

பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த ஆண்டு, விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்டம் நிறைவேற்றம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் சட்டமசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய...

2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

Friday 3 May 2013


படிகள் - அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அகவிலைபடி அரசானை

அகவிலைபடி அரசானை http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_145_2013.pdf

my friend Short Film 8:59


அறிவிப்பு:

கோடை விடுமுறையில் குதூகலமாக சுற்றுலா செல்வோர் கவனத்துக்கு... சுற்றுலா தலங்களில் நீங்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ அல்லது அழகிய காட்சிகளையோ புகைப்படங்களாக எடுத்து www.facebook.com/ChuttiVikatanபக்கத்தில் Message-ல் இணைத்து அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் புகைப்படங்களும், அதற்கான கமென்டுகளும் சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும். அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்ப விரும்புவோர், chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அவ்வப்போது சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும்.
அறிவிப்பு:

கோடை விடுமுறையில் குதூகலமாக சுற்றுலா செல்வோர் கவனத்துக்கு... சுற்றுலா தலங்களில் நீங்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ அல்லது அழகிய காட்சிகளையோ புகைப்படங்களாக எடுத்து www.facebook.com/ChuttiVikatan பக்கத்தில் Message-ல் இணைத்து அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் புகைப்படங்களும், அதற்கான கமென்டுகளும் சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும். அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்ப விரும்புவோர், chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அவ்வப்போது சுட்டி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும்.


News
பெ.நா.பாளையம்: இந்திய தேசிய கொடியை காண் பித்தால் காங்கிரஸ் கட்சி கொடி, என்று கூறுபவர்கள் மத்தியில் ,பெரியநாயக்கன் பாளையத்தை ...

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு


பதிவு செய்த நாள் : மே 03,2013,11:05 IST
மாற்றம் செய்த நாள் : மே 03,2013,11:08 IST
மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டியை கால் சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது 7.5 சதவீதமாக உள்ள இந்த வட்டி விகிதம் 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் தற்போதைய 4 சதவீதம் என்ற நிலையிலேயே தொடரும். ரெப்போ வட்டி குறைப்பால் வாகனம் மற்றும் வீட்டுக்கடன் வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை குறைக்க வலியுறுத்தல்மே 03,2013,09:51 IST

எழுத்தின் அளவு :
சென்னை: "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை, சரியாக அமல்படுத்தவில்லை. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதனால், 45 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் ஆதி திராவிட தேர்வர்கள், 58 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. பல மாநிலங்களில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: இந்த கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார்.
பாலபாரதி - மார்க்சிஸ்ட்: இதுவரை, இரு முறை, டி.இ.டி., தேர்வுகள் நடந்தபோதும், போதிய அளவிற்கு, ஆசிரியர் தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. இதை உணர்ந்து, இந்த பிரச்னையில், தமிழக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி: தகுதி மதிப்பெண்கள் அளவை குறைப்பதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, ஆர்.டி.இ., சட்டத்திலேயே, தெளிவாக கூறப்பட்டு உள்ளது. எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்தால், அதிகமான தேர்வர்களை, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய முடியும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

  • மே 4 (ச) அக்னி நட்சத்திரம் ஆரம்பம் (ம.1.01)
  • மே 13 (தி) அட்சய திரிதியை
  • மே 15 (பு) ஆதிசங்கரர் ஜெயந்தி
  • மே 24 (வெ) வைகாசி விசாகம்
  • மே 28 (செ) அக்னி நட்சத்திரம் முடிவு (இ.8.10)

Temple அக்னி நட்சத்திர விழா பழநியில் மே 8ல் துவக்கம்!அக்னி நட்சத்திர விழா பழநியில் மே 8ல் துவக்கம்!
பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா மே 8ல் துவங்கி 21ல் நிறைவடைகிறது. இந்நாட்களில் சேலம், திண்டுக்கல், கரூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் 
மேலும் படிக்க..