08.11.2024க்கு தள்ளி வைக்கப்பட்ட HS HM Promotion வழக்கு தற்போது 11.11.2024க்கு தள்ளி வைப்பு!
Postponed to 11.11.2024 - Download here
Postponed to 11.11.2024 - Download here
Class 1, 2 & 3 - Term 2 - Training Quiz Questions & Tentative Answers for Teachers Handling Ennum Ezhuthum...
1 to 3 Std Term 2 Training Q&A -pdf
4 & 5th Std Term 2 Training Q&A -pdf
Rainy season - Precaution instructions - Download here
TTSE 2024 HALL TICKET - DGE Instructions - Download here
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது . தமிழ்நாட்டில் உள்ள 13,236 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25ஆம்கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2024-25செயல்முறைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது . அறிவியலும் தொழில்நுட்பமும் பொறியியலும் , கணிதவியலும் வாழ்வை சமூக வாழ்வை மென்மேலும் வசதியாக்க , எளிமையானதாக்க கை கோர்த்து சேவை செய்து வருகின்றன . எந்த ஒரு தொழில்நுட்பமும் கடந்த நூற்றாண்டைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடுகிறது . அதுபோலவே பழமையானதாகவும் ஆகிவிடுகிறது.மாறிவரும் சூழலை எதிர்கொண்டு தங்களை தகவமைத்துக் கொள்ள எதிர்கால சந்ததியினர் தயாராக வேண்டியுள்ளது . இதற்கேற்ப வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (அக்.8) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 தல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (100 மதிப்பெண்) அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்துவித ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இதுசார்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தீவாவளி முன் பணம் களஞ்சிய. வலைதளத்தில் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை
👇👇👇 Video
https://youtu.be/ovYn-eVxT0g?si=Anm-EN69GSKuOVCa
ஜூலை - 24ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
அரசு தேர்வுகள் இயக்ககம்.
ADW Teachers - State Seniority GO - Download Here
*🔹VERSION 0.3.0
*🔹UPDATED ON 30/09/2024
*🔹WHATS NEW?
⭕OOSC Module Changes.
Bug Fixes & Performance Improvements.
👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி கல்வி
விழுப்புரம்: செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.
உலக சுற்றுலா தினம் ஆண்டு தோறும் செப். 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவை பரந்த நோக்கில் அணுகுவதே உலக சுற்றுலா தினத்தின் நோக்கம். அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
அவர்களை செஞ்சி எம்எல்ஏ-வான அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், ஆட்சியர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, செஞ்சி ஒன்றியக் குழுத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். செஞ்சிக் கோட்டையில் இக்குழுவினர் இன்று ஆய்வு செய்வதால் இக்குழுவைத் தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் - நடப்பாண்டில் 55,478 பேருக்கு வழங்க திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மாறி வரும் கற்றல் - கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக டேப்லெட் கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த கல்வியாண்டில் (2023-24) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.101.48 கோடியில் டேப்லெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக நல்வரவேற்பு கிடைத்தது. தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணிகளுக்கும் இது வழி செய்வதாக ஆசிரியர்கள் கூறினர்.
இந்நிலையில், தொடர்ந்து 2-வது கட்டமாக நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சார்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் செயல்பாடுகளை துரிதமாக முடித்து ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் டேப்லெட்கள் வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
👇👇👇
DSE - Climate Change Circular - Download here
Animal Husbandry Department Framing of " Tamil Nadu State Dog Breeding Policy " Orders - Issued .
`குறிப்பு: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நாய் கடித்து சிறுவர் / சிறுமியர் தொடர்ந்து பாதிக்கப்படுவதை அடுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை....`
G.O.Ms.No.80 - Download here
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
proceedings of NAS - Download here
இது தொடர்பாக இந்திரா காந்திதேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூர கல்விதிட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ்படிப்புகளை வழங்கி வருகிறது.இந்நிலையில், 2024 ஜூலை பருவமாணவர் சேர்க்கைக்கான கடைசிதேதி மாணவர்கள், இல்லத்தரசிகள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோரின் நலனை கருத்தில்கொண்டு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொலைதூர கல்வியில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப். 30-ம் தேதி வரை சேர்ந்து கொள்ளலாம். சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு இந்த கால நீட்டிப்பு சலுகை பொருந்தாது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாத 5 லட்சத்து 33,100 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க திட்டமிட்டு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் வாயிலாக 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் கடந்த ஜூலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அனைத்து நகர, கிராம பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து எனும் இலக்கை விரைவில் அடைவோம் என்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் இதுசார்ந்த தொகுப்பு அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
👉🏼 என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?
1. பக்ரித்
2. கிறிஸ்துமஸ்
3. தீபாவளி
4. ஈஸ்டர்
5. காந்தி ஜெயந்தி
6. புனித வெள்ளி
7. விடுதலை நாள்
8. கிருஷ்ண ஜெயந்தி
9. மே தினம்
10. மிலாடி நபி
11. மொகரம்
12. ஓணம்
13. பொங்கல்
14. ரம்ஜான்
15. குடியரசு தினம்
16. தெலுங்கு வருடப் பிறப்பு
17. விஜயதசமி
18. விநாயகர் சதுர்த்தி
(பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.)
👉🏼 எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 02.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.
👉🏼 எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?
IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.
உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.
👉🏼 எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?
IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம் அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.
👉🏼 எப்போது பிடித்தம் ஆரம்பமாகும் ?
பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
Kalanjiyam Appல் Login செய்யவும்.
பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.
அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.
இறுதியாக, Submit செய்ய வேண்டும்.
👉🏼விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.
பின் குறிப்பு :
தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்.
👇👇👇👇👇👇👇
merger proposal 11.09.2024 - Download here
பணி அமர்வு Rank-ல் மூத்த நிலையில் இருப்பதாலேயே மூத்த நிலையில் உள்ளவர்கள் இளையவருக்கு ஈடாக ஊதியம் ஈடு செய்ய கோர முடியாது இளையவர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றதால் கூடுதல் ஊதியம் பெறலாம்.
அல்லது மூத்த நிலையில் உள்ளவர் தண்டனை / ஊதியமில்லா விடுப்பு / தற்காலிகப் பணி நீக்கம் போன்ற நேர்வுகளில் ஊதிய உயர்வினை இழந்திருக்கலாம். இதனால் மற்ற நிலையில் இருப்பவர் Rank - அடிப்படையில் இளையவருக்கு ஈடாக ஊதியம் உயர்த்திக் கோர முடியாது.