Friday 13 September 2024

PG Assistant - 3 months Post Continuance Order

 


PG Assistant - 3 months Post Continuance Order

IMG_20240913_120205

School Education Department - Temporary Posts Sanctioned - Post Graduate Assistant 47 posts Further Continuance Orders awaited from Government - Certifiate for a Period of 3 months from 01-09-2024 Issued - Regarding

 PG Assistant - 3 months Post Continuance Order

Download Here

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப கல்வித்துறை உத்தரவு

 


கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப கல்வித்துறை உத்தரவு

 


கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப கல்வித்துறை உத்தரவு  - Download Here

TET வழக்கு - விசாரணை தேதி மாற்றம்

 விசாரணை தேதி மாற்றம்

TET வழக்கு - விசாரணை தேதி மாற்றம்

பதவி உயர்வுக்கு TET தேவை வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை.

TET case 15.10.2024 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.

IMG-20240913-WA0021

IMG-20240913-WA0022

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைக


6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைக

IMG_20240913_150449

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT Dir Proceedings - Download Here

ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் ( 14.09.2024) நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள

 ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் ( 14.09.2024) நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள

 
2024-25 ஆண்டிற்கான ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - மனமொத்த மாறுதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Wednesday 11 September 2024

பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

 பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

Gratuity-Amount



"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.

இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.



   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.


    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்.

திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025


திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025



மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025 (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு



செப்டம்பர்   14, 21

அக்டோபர்   5

நவம்பர்

டிசம்பர்   14, 21

ஜனவரி   4

பிப்ரவரி    15

மார்ச்   1, 22

ஏப்ரல்   5, 12

காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிப்பு தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணை

 தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது

இந்நிலையில் காலாண்டு தேர்வு குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது. செப்.20ம் தேதி தொடங்கும் தேர்வு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.

தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 வரைம், 8ம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும், 10ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறும்.


App%20Image

Monday 9 September 2024

EMIS New Update - Change profile request 2024-202

 EMIS New Update - Change profile request 2024-202

IMG_20240909_205033 EMIS New Update - Change profile request ( Government and government aided schools ) 2024-2025

Download pdf file

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!


2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

 IMG_20240909_202034

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை ( 2 ) ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது . இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை ( 2 ) ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.

 பார்வை ( 3 ) ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் ( 210 நாட்கள் கற்றல் - கற்பித்தல் , தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் ) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

`புதிய நாட்காட்டி விரைவில்....

 DSE - New Academic Calendar - Proceedings👇👇👇

Download here

6- 12th Std | காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE செயல்முறைகள்!

  - DSE செயல்முறைகள்!

6- 12th Std | காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - DSE செயல்முறைகள்

 IMG_20240909_181315

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் முதன்மை 
 கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Quarterly Exam Schedule & DSE Proceedings - Download here

மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து மோசடி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு

 


மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து மோசடி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு

திருவள்ளுர் மாவட்டத்தில் வருகை பதிவேட்டை திருத்தி,  மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த  மோசடியை தொடர்ந்து  அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட்  செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

suspension order - Download here

வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!


வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!

anu737s1-down-1725788479

இந்தியாவில் வசிப்பவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறை அவற்றை சரி பார்க்கும். வரி செலுத்தியவர் கூடுதல் வரி செலுத்த வேண்டியுள்ளதா? அல்லது ரீபண்ட் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதா? என்பது போன்ற விவரங்களை சரி பார்த்த பின்னர் அந்தந்த நபர்களுக்கு ரீபண்ட் வர வேண்டி இருந்தால் திருப்பி செலுத்தப்படும். இந்த செயல்முறைக்கு முன்னதாக வரி செலுத்துவோர் சரிபார்க்கப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஏனெனில் வருமானவரி தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு.

இந்த எல்லா செயல்முறையும் சரியாக செய்தவர்களுக்கும் இன்னும் ரீபண்ட் தொகை வராமல் இருக்கும். ஜூலை 31-ஆம் தேதி அன்று வருமான வரி தாக்கல் செய்தவருக்கு ரீபண்ட் கிடைத்துவிட்டது ஆனால் அதற்கு முன்கூட்டியே தாக்கல் செய்த எனக்கு ரீபண்ட் கிடைக்கவில்லை என்று புலம்புபவரா நீங்கள்.. உங்களுக்கு ரீபண்ட் கிடைக்காததற்கு கீழ்காணும் விஷயம் கூட காரணமாக இருக்கலாம்.


வருமானவரித்துறை ரீபண்ட் தொகையை திருப்பி செலுத்துவதற்கு சில விஷயங்களை சரி பார்க்கும். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று தான் ரிஸ்க் "மேனேஜ்மென்ட் சிஸ்டம்" (RMS) இந்த RMS சிஸ்டத்தைப் பயன்படுத்தி தான் வருமான வரித்துறை இன்னும் சில நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ITR-களை அடையாளம் காணும். RMS சிஸ்டத்தில் உங்கள் ஐடிஆர் அடையாளம் காணப்பட்டால் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு தகவல் அனுப்பப்படும். இந்த அறிவிப்பை நீங்கள் இ-ஃபைலிங் போர்டல் மூலமாகவும் பார்க்கலாம்.

வருமானவரித் துறையின் RMS போர்டல் உங்கள் ஐடியாரை கண்டறிந்த பிறகு எந்தவித செயலாக்கமும் செய்யப்பட மாட்டாது. அதற்கான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் வரி துறை உங்களுக்கு வருமான வரி அறிவிப்பை வெளியிடலாம்.


வருமானவரித்துறையின் "ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம்" எப்போது உங்கள் ரீபண்ட் செயல்முறையை நிறுத்திவைக்கும்?: வருமானவரித்துறையின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில் அதாவது பல ஆண்டுகளாக வரி கணக்குகளில் போலியான கோரிக்கைகளை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அத்தகைய கோரிக்கைகளை செய்த நபர்களை கைது செய்யும் நோக்கத்துடன் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

வரித் துறையால் பயன்படுத்தப்படும் RMS செயல்முறை முரண்பாடுகளைக் கண்டறிய பல்வேறு தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்கிறது என்று கூறப்படுகிறது.


வருமான வரித்துறையின் இந்த RMS வழக்கத்திற்கு மாறான உரிமை கோரல்களை எளிதில் கண்டுபிடித்து விடும். இதன் மூலம் கூடுதல் ஆய்வு தேவைப்படும் ஐடியார்களை கண்டுபிடித்து விடலாம். இந்த செயல்பாட்டின் கீழ் உங்கள் ஐடிஆர் தேர்ந்தெடுக்கப்படும்போது ரீபண்ட் பெரும் செயல்முறை சற்று தாமதமாகலாம். அப்படியானால் உங்கள் வருமானத்தில் சில விஷயங்களை வருமானவரித்துறை சரி பார்க்க விரும்புகிறது என்று அர்த்தம்.

வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு கிடைத்ததா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?:

அதற்கு முதலில் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் லாகின் செய்து உள்நுழைய வேண்டும். "For Your Action" என்பதன் கீழ் இதுகுறித்த அறிவிப்புகள் இருக்கும்.

இதற்கு உங்களுடைய பதிலை சமர்ப்பிக்க e-Filing portal >>Pending Action >>Worklist>> Response for Refund Confirmation என்பதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வரித் துறை, வரித் திரும்பப் பெறல் செயல்முறையை நிறுத்தி, உங்கள் ITR ஐ மேலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை அடையாளம் காண ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. எனவே ரீபண்ட் பெறுவதற்கு நீங்கள் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், வரித் துறை உங்களுக்கு வருமான வரி அறிவிப்பை வழங்கலாம்.

வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும்


வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும்



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழங்கி உள்ள தலைமையாசிரியரின் கையட்டில் உள்ளபடி வகுப்பு ஆசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும் கீழே உள்ள pdf லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொகுத்து வழங்கியவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம்


Click Here to Download - வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும் - Pdf

Kalanjiyam App வழியாக CL, RL, ML விடுப்பு விண்ணப்பித்தல் மற்றும் அனுமதித்தல் - ஐயங்கள் மற்றும் விளக்கங்கள்


Kalanjiyam App வழியாக CL, RL, ML விடுப்பு விண்ணப்பித்தல் மற்றும் அனுமதித்தல் - ஐயங்கள் மற்றும் விளக்கங்கள்




களஞ்சியம் ஆப் வழியாக விடுப்பு விண்ணப்பித்தல் மற்றும் அனுமதித்தல் சார்ந்த பதிவு.

ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் விடுப்புக்களை களஞ்சியம் மொபைல் ஆப் வழியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட HRMS / c-SR முழுமையாக நடைமுறைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இது ஒர் அடுத்த கட்ட நகர்வு. 


தமிழ்நாடு பள்ளிக் 

 கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 055365/சி2/இ1/2024 நாள் 16.08.24 சார்ந்த ஐயங்களுக்கு சில விளக்கங்கள்.