Tuesday 3 September 2024

CPS missing credit சார்ந்த பதிவு


CPS missing credit சார்ந்த பதிவு

.com/

1) பணியாளர்கள் cps.tn.gov.in/public  website இல் சென்று individual login..

account statement download செய்து கொள்ளலாம் ( தற்போது 

நாம் CPS இல் சேர்ந்த / பணியில் சேர்ந்த நாள் முதல் 2023-24 நிதியாண்டு வரை அனைத்து வருட statement வருகிறது)


2) missing credit இருக்கிறதா என பாருங்கள்?

( Statement இல் கீழே missing credit month - என இருக்கும்)


3) சில நேரங்களில் DA arrear/ SG arrear CPS பிடித்தம் a/c statement இல் இல்லாமல் இருக்கலாம்... அதையும் சரிபார்த்து கொள்ளுங்கள்...


CPS missing credit இல்லை எனில் நன்று...

இருந்தால்


 *How to rectify missing credit* ?


1) login school/DDO CPS website... cps.tn.gov.in


2) login id 

treasury code_old DDO code

eg 0708_SB456

Password 

treasury code_old DDO code_123

Eg 0708_SB456_123


3) select missing credit


4) MC(2023-24)


5) select month select employee CPS number submit 


6) forward to other treasury?

select yes or no 

தற்போது நம்மிடம் பணிபுரிகிறார் ஆனால் missing credit பழைய பள்ளியில் இருக்கும் போது எனில் yes கொடுத்து 

select district select treasury select DDO submit ( பழைய பள்ளிக்கு மாறி விடும்) நமது பள்ளியில் இருக்கும் போது தான் missing credit எனில் NO...


7) loss of pay, death, already paid,... இது போன்ற காரணம் எனில் select respective reason


8) உண்மையில் missing credit  எனில்...


Enter amount...

CPS schedule total amount...

Token no...

Date....

Voucher no...

Date ( last date of the month)... 

Treasury...

Date of encashment...

Bill GA...

Bill NA...

Head of account...(eg 2202)

15A..

Originally booked Head ( 8342) (en face ment first four digits)

Reason....( Select)

Submit.....


9) note.... 

CPS contribution 10000 க்கு மேல் எனில் அந்த மாத CPS schedule pdf ஆக attachment செய்ய வேண்டும் 


10) ஒரே ஒரு missing credit தான் எனில் submit க்கு பிறகு finalize the entry...


11) ஒன்றுக்கு மேற்பட்ட CPS missing credit எனில் ஒவ்வொன்றாக entry போட்ட பிறகு கடைசியில் தான் finalize the entry வழங்க வேண்டும்...


12) finalize செய்து முடித்த பிறகு... Forward to treasury


13) நமது பணி முடிந்தது...


14) dashboard இல்..

 total no of missing credit...

Completed...

Forwarded...

Yet to complete....

என இருக்கும் அதை வைத்து முடித்தது/ முடிக்காதது பற்றி தெரிந்து கொள்ளலாம்...


பதிவு தான் பெரிதாக இருக்கிறது 🤪🤣...

சில நிமிடங்களில் மொத்த பணியாளருக்கும் எளிதாக முடித்து விடலாம் ☺️🙏..


15) IFHRMS இல் 


initiator...

Finance...

Bills...

Bill report...

TNTC 70.... e-70 download...


செய்து கொள்ளுங்கள்..

இதில் token no... Bill no.. GA/NA.. voucher no...DOE.. என அனைத்தும் இருக்கும்...


16) அடுத்த ஆண்டு 2024-25 statement போது ... இந்த missing credit தொகை நமது கணக்கில் வரவு செய்யப்பட்டு இருக்கும் 🙏


(IFHRMS உள்ளேயும் 

தொழில் வரியில் இந்தாண்டு எவ்விதம் மாற்றமும் செய்யப்படவில்லை.

 தொழில் வரியில் இந்தாண்டு எவ்விதம் மாற்றமும் செய்யப்படவில்லை.

 தொழில் வரியில் இந்தாண்டு எவ்விதம் மாற்றமும் செய்யப்படவில்லை.


கடந்த ஆண்டு செலுத்திய தொழில் வரியே இந்தாண்டும் செலுத்த வேண்ட           வரியே இந்தாண்டும் செலுத்த வேண்டும்.

IMG_20240903_171300

வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 706


வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வெளிமாநில மையங்கள் மூலம் மாணவர்களை சேர்த்து வகுப்புக்கு வராமலே தேர்ச்சி வழங்குவதாகப் புகார் கூறப்படுகிறது.

வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் - (நினைவூட்டல்

 


வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் -  (நினைவூட்டல்)!!! - Download Here

கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த புதிய வழிகாட்டுதல்கள் - நாள்


கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த புதிய வழிகாட்டுதல்கள் - நாள்: 02.09.202

Monday 2 September 2024

மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம்!!!

 IMG_20240901_222020

கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம்!!!

Chief Secretary D.O Lr 28.08.2024-1.pdf 👇👇👇

Download Here

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!


 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! - Download Here

மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20240902_143508

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு  மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - SSLC & +1 NR Preparation👇👇👇

Download Here

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

1304260

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் 

 கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பள்ளிக்கல்வித் துறை செயலருடன் நடந்த பேச்சு வார்த்தையில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக டிட்டோஜேக் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் டிட்டோஜேக் மாநில நிர்வாகிகள் அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், டி.ஆர்.ஜான் வெஸ்லி, இலா.தியோடர் ராபின்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் விவரம் வருமாறு;- கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 3 முதல் 9-ம் தேதிவரை ஆசிரியர் சந்திப்பு இயக்கம் மற்றும் போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு முன்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் செயலரை செப்டம்பர் முதல் வாரத்தில் சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வழங்க வலியுறுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

Friday 30 August 2024

Annual Planner 2024 - Programme of Examinations

 

Annual Planner 2024 - Programme of Examinations

Last updated on: 17.08.2024

S.NoName of the ExaminationNo. of VacanciesDate of NotificationDate of Commencement of ExaminationNo. of Days
1Combined Civil Services Examination (Group IV)624430.01.202409.06.20241
2Combined Civil Services (Preliminary) Examination (Group I)9028.03.202413.07.20241
3Combined Civil Services (Preliminary) Examination (Group I-B and I-C)2923.04.202412.07.20241
4Combined Technical Services Examination - Degree / Post Graduate Degree Level (Interview Posts)10815.05.202412.08.20243
5Combined Civil Services (Preliminary) Examination (Group II and IIA)232720.06.202414.09.20241
6Combined Technical Services Examination - Degree / Post Graduate Degree Level (Non-Interview Posts)65426.07.202414.10.202410
7Combined Technical Services Examination - Diploma / ITI Level86113.08.202409.11.20245
8Assistant Public Prosecutor Grade II in Prosecution Department (Preliminary)5013.09.202414.12.20241
9Combined Technical Services Examination - Degree / Post Graduate Degree Level (Interview Posts)- II5030.08.202418.11.20243
10Combined Civil Services Examination (Group-VA Service)1717.10.202404.01.20251
Note :
  1. This planner is tentative and it is published to enable the candidates to prepare themselves for the examination.
  2. There may be additions or deletions to examinations mentioned in the planner.
  3. The vacancies indicated are liable for modification before or after the examination.
  4. The syllabus is available on the Commission’s website www.tnpsc.gov.in, which is also subject to modification till the date of publication of the Notification.
  5. Visit the Commission's website for updates regarding notification

பொறியியல் படிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு 60,000 இடங்கள் காலியாக வாய்ப்பு

 


பொறியியல் படிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு 60,000 இடங்கள் காலியாக வாய்ப்பு


தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.93 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத்திறனாளி உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 836 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 2 சுற்றுகள் முடிவில் 64,020 இடங்கள் நிரம்பியுள்ளன.



இதைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் (ஆக.28) நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 14,149 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 82,693 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 3,769 அரசுப் பள்ளிள் மாணவர்கள் உட்பட 51,920 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை /www.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறியலாம்.



இதற்கிடையே, சிறப்புப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 23,031 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 70,403 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதேநேரம் கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 1 லட்சத்து 16,620 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு சேர்க்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.



துணைக் கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் /www.tneaonline.org/ எனும் வலைதளம் வழியாக செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின்னர் எஸ்சிஏ காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11-ம் தேதியில் நடைபெறும். இவற்றின் மூலமாக சுமார் 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு ஆண்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் சுமார் 60,000 இடங்கள் வரை காலியாகக் கூடும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை!


"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

 "கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

Upto 75L Loan News - Download here

10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு


10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு

 1302642

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பள்ளி கல்வித்துறை நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்கம

 


பள்ளி கல்வித்துறை நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்கம

 448-252-22323713-thumbnail-16x9-tri

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் மத்திய அரசு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்திடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச செல்லும் பொழுது அவர்களிடம் பேச மறுக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி வழங்க முடியும் என மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது. நடைமுறையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு 60 விழுக்காடு ஊதியத்தை மத்திய அரசும், 40 விழுக்காடு ஊதியத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.

தற்போது முழு தொகையையும் மாநில அரசு ஏற்று வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் சிறப்பு ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்கள் வட்டார வள மைய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் ஊதியம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையும் வழங்க முடியாத நிலையும் ஏற்படும். அதே போல கலை திருவிழாக்களையும் நடத்த முடியாத சூழல் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இத்தகைய ஊதியத்தை நம்பி பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பாதுகாக்கும் விதத்தில் உடனடியாக மத்திய அரசு அந்த தொகையை விடுவிக்க வேண்டும். இதனால் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படும். அதே போல ஓய்வூதியம் வாங்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும். சரண்டர் தொகையையும் அரசால் வழங்க முடியாது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் தமிழ்நாடு அரசின் முன்பு வைக்கும் பொழுது, அவர்கள் மத்திய அரசிடம் இருந்து வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது. அதனால் எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்று பதில் அளிக்கிறார்கள். எங்களுடைய கோரிக்கைகளும் இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.