அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வடிகட்ட, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு
இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில்,
ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள்அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Probability of getting 3 heads and 3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.
5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண் 38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்டநாற்கரமானது ஒரு சாய்சதுரம் என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7) are the vertices of a rhombus." என்று உள்ளது.
மேற்காணும் தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர
தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது.
CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமைச் செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.
தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.
107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
2015-16 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடியும், உயர்கல்விக்கு ரூ.3,696 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், மார்ச் 25ம் தேதி (இன்று) சட்டசபையில் தாக்கல் செய்தார்.
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அகஇ - 2015/16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - படிவங்கள், தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் தில்லியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுப் பள்ளி ஆசிரியர் என்பது ரமாதேவியின் அடையாளம். அந்த அடையாளத்துடன் மட்டும் அவர் நிறைவடையவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற நதிபோல் எப்போதும் ஏதாவதொரு பணியில் உற்சாகத்துடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். உலக மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கருத்தரங்கில் ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகப் பங்கேற்றுத் திரும்பியவரின் முகத்தில் பெருமிதத்தின் சுவடு துளியும் இல்லை.