Wednesday 4 March 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்'டா: இறுதி வாய்ப்பை வழங்கியது டி.ஆர்.பி.,

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்காக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 20 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது.

நாளை(மார்ச் 5) பிளஸ் 2 பொதுத்தேர்வு: முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(மார்ச் 5), பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் இத்தேர்வில், முறைகேடுகளைத் தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

WEDNESDAY, MARCH 4, 2015

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்


ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர்.

Saturday 28 February 2015

652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கானசான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்.,க்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் தான் பொதுத் தேர்வுகளை கண்காணிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக செப்டம்பரில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் தேர்வுகள் முடிந்து தேர்ச்சி பாதிப்பதாக சர்ச்சை எழுகிறது.

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெறும். கடந்த ஆண்டு வரை இதற்கான விடையை ஓ.எம்.ஆர்., தாளில், வட்டமிட்ட பகுதியை பென்சிலால் கருமைப்படுத்தினர்.

மத்திய பட்ஜெட்- 2015

-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு

-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு


-தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு

Friday 27 February 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு

பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி சலுகை, வேலை வாய்ப்பு திட்டங்கள், வேளாண்மைத்துறைக்கு சலுகைகள் போன்றவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்

Thursday 26 February 2015

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?அரசாணை நிலை எண்.687, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.16.7.82ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் சிலர், பல்வேறு காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல் போயிருக்கலாம். அவர்களின் நலன் கருதி, 'தக்கல்' முறை எனப்படும் சிறப்பு அனுமதி முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை நாள்.12.01.2011ன்  படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012, நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மண்டல கணக்கு அலுவலர், கோயம்புத்தூர் அவர்களால்

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15 | Click here for Provisional List of Candidates Selected for Appointment

Monday 23 February 2015

SSLC - MARCH / APRIL - 2015 - PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOA

HSE - MARCH - 2015 - REGULAR CANDIDATE HALL TICKET DOWNLOAD (SCHOOL LEVEL) SSLC - MARCH - 2015 - NOMINAL ROLL DOWNLOAD

HSE - MARCH - 2015 - PRIVATE & TATKAL CANDIDATE HALL TICKET DOWNLOAD


HSE - MARCH - 2015 - PRIVATE & TATKAL CANDIDATE HALL TICKET DOWNLOAD

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்

எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றால் முதல் ஊக்கத் தொகையும், எம்.எட். அல்லது எம்.பில்., பி.எச்டி. படித்தால் இரண்டாவது ஊக்கத் தொகையும் பெறலாம் என அரசாணை திருத்தப்பட்டுள்ளது.

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம் - மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம்

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

பிப்ரவர் 23ல் பி.எட் செய்முறை தேர்வு


பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23ல் துவங்குகிறது. தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15க்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்கி மார்ச் 13 வரை 6 கட்டங்களாக நடக்கிறது.

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு

வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிகள் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்து எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Monday 16 February 2015

வரவிருக்கும் விசேஷங்கள்

  • பிப்ரவரி 17 (செ) மகா சிவராத்திரி
  • மார்ச் 04 (பு) மாசிமகம்
  • மார்ச் 14 (ச) காரடையான் நோம்பு
  • மார்ச் 21 (ச) தெலுங்கு வருடபிறப்பு
  • ஏப்ரல் 02 (வி) மகாவீரர் ஜெயந்தி
  • ஏப்ரல் 03 (வெ) புனிதவெள்ளி

தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர், நாளை துவங்குகிறது

சட்டசபை கூட்டத்தொடர்: ஆளுங்கட்சி திட்டம்

தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர், நாளை துவங்குகிறது. இந்த கூட்டத்தொடரில், எதிர்க் கட்சிகள் ...

Friday 13 February 2015

TNTET CERTIFICATE |

♣ TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. Click Here

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

DEO EXAM RESULT SOON |

DEO EXAM RESULT SOON | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

7th CPC Estimated Pay Calculator.

TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD - CLICK HERE

TRB PGT RESULT PUBLISHED ON 6.2.2015 - CLICK HERE

IT FORM 2015 VERSION 1.2- DOWNLOAD - CLICK HERE