Tuesday 4 February 2014

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு - சென்னை ஐகோர்ட்டு

முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், கே.ஞானசுந்தரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது: விரைவில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களும் சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.இரண்டாவது முறையாக இரட்டை இலக்கத்தில் அகவிலைப் படி உயர்த்தப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு: இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்

ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு எனப்படும் சர்வீஸ் ரெஜிஸ்டர் ஆகும். ஆசிரியர்களின் விபரங்கள் மட்டுமின்றி அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களின் பதவி உயர்வு, சம்பள விபரங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும். மேலும் பணிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரங்களும் இதில் இடம்பெறும்.

மத்திய அரசு ஊழியர்களைபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுமா?

 மத்திய அரசு ஊழியர்களுக்கு, மீண்டும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்று தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதுவும் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

டி.இ.டி., தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை: முதல்வர் ஜெயலலிதா

டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் இதுகுறித்து முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவ, மாணவியரே, துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் நிலை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவ, மாணவியரே, துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற பயத்தில், இது குறித்து, ஆசிரியர்களிடம் முறையிடுவதற்கு தயங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வு வரும் 7ம் தேதி தொடக்கம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. அதன் மதிப்பீட்டை 22ம் தேதிக்குள் முடிக்கவும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக எந்த மாணவருக்கு எந்த தேர்வு மையம் என்ற விவரங்கள் 5ம் தேதி அனுப்பி வைக்கப்படுகிறது.

வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது நிதி மந்திரி ப.சிதம்பரம்

வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். இந்த பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வரையிலான மாதங்களுக்கு செலவினங்களை மேற்கொள்ள செலவு மானிய கோரிக்கை (இடைக்கால பட்ஜெட்) இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்காணும் விவரம் கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று( 03.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம்பெற்றிருந்தது.

நூறு சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் சட்டசபையில் ஜெயலலிதா பெருமிதம்

தமிழகம் 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக திகழும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார். தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஜனவரி 30–ந்தேதி கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த 3 நாட்களாக சட்டசபையில் விவாதம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் புரிந்த விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா? 

ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை, முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்

ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை, சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்.கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68 ஆயிரத்து 481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51 ஆயிரத்து 757 ஆசிரியர்கள், இடஒதுக்கீட்டு முறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்

டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது.

Sunday 2 February 2014

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்.

AICPIN for the month of December 2013


Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) December 2013
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for December, 2013 declined by 4 points

இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற பிப்.5ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்ப்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013

சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலருக்கு விருது

சிறப்பாக பணியாற்றியதற்காக விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் திரு. சா.மார்ஸ் அவர்களுக்கு குடியரசு தினத்தன்று (26.01.2014) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்பொழுது மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், காவல் துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் மற்றும்

நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கும்: பிராண முத்திரை

பிராண முத்திரை :
பயிற்சி மூளையின் செல்களில்குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன்மிக மிக அவசியம்.
காரணம் மூளை தனதுஎரிபொருளாக குளுகோஸையேபயன்படுத்திக் கொள்கிறதுஇவை நவீனவிஞ்ஞானம் கூறும் உண்மைகள்பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரேமூளைக்கும் பிராண சக்திக்கும்இடையிலான தொடர்பு குறித்து நமதுதந்திர யோகிகள்அறிந்திருந்தனர்மூளையின்இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றிபிராண சக்தி எனப்படும்பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றனஇந்த பிராண சக்தியைஉடலில் அதிகரிக்கச் செய்துமூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச்செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் 90 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசு பணி வேண்டி 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பதிவு அதிகரித்துள்ளது.

தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

"தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.

Friday 31 January 2014

TNPSC ANNUAL PLANER 2014-2015..DOWNLOAD

ஆசிரியர் தேர்வு வாரியம் - பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி துறையில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை : தமிழக அரசு :
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

INCOME TAX & FORM 16 FORMAT - CORRECTED AS PER RULE 87A

INCOME TAX FORMAT CLICK HERE...

PREPARED BY MR. P.MANIMARAN, B.T.ASST., GHS, P.THOTTIYANKULAM

INCOME TAX & FORM 16 FORMAT CLICK HERE...

PREPARED BY MR. S.MANOHAR, BT.ASST., THIYAGARAJAPURAM, VIRUDHUNAGAR 

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள்

இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும் 60 ஜாதிகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும் போதும், வேலையில் சேரும் போதும் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: வீடுகளுக்கு இனி மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்

வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் இதை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.

உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி

முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது.

அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். கடைசியாக கடந்த 2013 ஜூலை  முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2014 ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.

நிகர வரி செலுத்த வேண்டிய வருமானம் (NET TAXABLE INCOME) ரூபாய் 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு

As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A, where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable income up to 5,00,000/-. For more clarification about this new section under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below:

3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Thursday 30 January 2014

புதிய 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு' பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒருவரே, பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.