Monday 27 May 2013


பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை

1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்க கல்வித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்

மாண்புமிகு தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை


முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு.


மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும், கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும்

ஆசிரியர் பயிற்சி: மே 27 முதல் விண்ணப்பம் வினியோகம்

"ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு, நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2விற்கு பின், உயர்கல்வியில், மருத்துவ படிப்பே, மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. ஆனால், பொறியியல் படிப்பை ஒப்பிடும்போது, மருத்துவ படிப்பிற்கு, கல்லூரிகளில் இடம் கிடைப்பதில், ஆண்டுதோறும், மாணவர்கள் மத்தியில், கடும் போட்டி நிலவி வருகிறது.

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கல்வி அலுவலக நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு: ஆண், பெண் சம விகிதத்தில் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று வழங்கல்

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது.

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா?

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

"சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர்க்க வேண்டியதில்லை" - கேரள உயர்நீதிமன்றம்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி வந்தது. 2009ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ.யில் படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவிலும், வாரியம் அளவிலும் தேர்வு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.

கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுத கூடாது என்று உத்தரவு வந்ததா? கல்லூரி கல்வி இயக்குனர் விளக்கம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?

தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஊதிய நிர்ணயக் குளறுபடி - பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஓர் ஒப்பாய்வு

M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது. உயர்பதவியான முதுநிலை ஆசிரியராக நியமனம் பெற்றால் மாதம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் ரூ.1152 வீதம் இழப்பு ஏற்படும். எப்படியெனில்,

தமிழகத்தில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளித்திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு - ராஜ் நியூஸ்

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்-3ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*F தாண்டியது.வழக்கமாக பெய்யும் கோடை மழை இந்த ஆண்டு சுத்தமாக பொய்த்துப்போனது.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை துவக்கம்

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 28) தொடங்குகிறது.

மே 28-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.

சித்தர்கள் இராச்சியம் 
சாயா புருஷ தரிசனம்!

சாயை என்ற சொல்லுக்கு உருநிழல், பிரியாத துணை என்பதாக அர்த்தங்கள் உண்டு. நம்முடைய நிழலையே நாம் பார்ப்பதன் மூலம் அதை உணர்வதையே சாயா புருஷ தரிசனம் என்கின்றனர். இந்திய யோக மரபில் இந்த சாயா தரிசனம் பற்றி நிறைய குறிப்புகள் காணப் படுகின்றன. நமது சித்தர் பெருமக்களின் பாடல்களிலும் கூட இத்தகைய குறிப்புகள் காணப் படுகின்றன. பத்திரகிரியார் பாடலொன்று பின் வருமாறு..

கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்

-பத்திரகிரியார்.

வெயில் நேரத்தில் கீழே விழும் நமது நிழலைப் பார்ப்பதில் பெரிதாக என்ன விசேடம் இருந்து விட முடியும் எனத் தோன்றுவது இயற்கையே... நிழலைப் பார்ப்பதில் விசேடமில்லை, அப்படிப் பார்த்த நிழலின் ஊடாக நம் சாயையை தரிசிப்பதில் தான் விசேடமிருக்கிறது. குண்டலினி யோகம் பயில்பவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகும் என்கிறார்கள்.

சரி, இந்த சாயா தரிசனத்தை எப்படி பெறுவது?

மேகங்கள் இல்லாத காலைப் பொழுதில்.....

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/02/blog-post_13.html

.
சாயா புருஷ தரிசனம்!

சாயை என்ற சொல்லுக்கு உருநிழல், பிரியாத துணை என்பதாக அர்த்தங்கள் உண்டு. நம்முடைய நிழலையே நாம் பார்ப்பதன் மூலம் அதை உணர்வதையே சாயா புருஷ தரிச...See More

oru salute...
Photo

 தமிழ் -கருத்துக்களம்-'s photo.
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

<3, @[115109758557124:274:தமிழ் -கருத்துக்களம்-]
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"
...See More

சித்தர்கள் இராச்சியம் 
சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை

சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன. இந்த மந்திரங்களை செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது போன்றவைகள் குருவினால் மட்டுமே கூறிட இயலும். தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.

இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை இன்று பார்ப்போம். மந்திரத்தை எவ்வாறு பெறுவது,  அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி பார்ப்போம்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2010/12/blog-post_04.html

.
சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை

சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன...See More

  • சித்தர்கள் இராச்சியம
    The method of identifying the disease told by Thirumoolar

By holding the hand at the pulse that runs behind the thumb, i.e., one inch above the wrist, at that point hold the hand with three fingers equally and slowly feel the pulse and after identifying the pulse keep changing the fingers we can identify the beat of the pulses. This is how the Siththars have noticed. They have used the fingers to identify as an equipment. For gents right hand and for ladies the left hand has to be used to examine says Siththars.

Read more@

http://www.siththarkal.info/2012/07/the-method-of-identifying-disease-told.html

.
    The method of identifying the disease told by Thirumoolar

    By holding the hand at the pulse that runs behind the thumb, i.e., one inch above the wrist, at that ...

  • சித்தர்கள் இராச்சியம் 
    உணவும், வகையும் - சாத்வீக உணவு!

மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. 

நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் இன்று முதலாவது பிரிவான சாத்வீக உணவு பற்றி பார்ப்போம்...

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/03/blog-post_07.html

.
    உணவும், வகையும் - சாத்வீக உணவு!

    மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சி...See More


Photo

Friday 24 May 2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை



பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கைமே 24,2013,09:51 IST

எழுத்தின் அளவு :
சென்னை: தொடக்க கல்வித் துறையில், பதவி உயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை, அறிக்கை சமர்ப்பித்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்று, தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற வழியில்லாமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
ஒரே தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களில், பள்ளி கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, பல பதவி உயர்வுகளை பெறுகின்றனர்.
அதே தகுதியுடன், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியைத் தவிர, வேறு எந்த பதவி உயர்வும் பெற முடிவதில்லை. நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படுவதால், இருக்கும் ஒரே பதவி உயர்வும், பாதிப்பதாக புலம்பி வருகின்றனர்.
இந்நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று, விரிவாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பள்ளி கல்வித் துறை, விரிவான அறிக்கையை, நேற்று சமர்ப்பித்தது.
இந்த பிரச்னை தீர்வதற்கு, ஒரே ஒரு வழி இருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு, டி.ஆர்.பி., மூலம் நடக்கிறது. ஆனால், பணி நியமனம், பள்ளி கல்வித் துறை, தொடக்க கல்வித் துறை என, இரு துறைகளில் நடக்கிறது.
இதை தவிர்த்து, டி.ஆர்.பி., தேர்வு அடிப்படையில், ஒரே பணி நியமனமாக நடந்தால், பிரச்னை வராது என, கல்வித் துறை தெரிவிக்கிறது. எந்த துறையில் பணியாற்றினாலும், டி.ஆர்.பி., தேர்வு வரிசை அடிப்படையில், பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுகுறித்து, தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.