பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலாகிறது. இதற்காக கருத்தாளர்கள், பாடம் வாரியான ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கருத்தாளர்களுக்கான பயிற்சி மே18ல் முடிந்த நிலையில், மே 29,30,31ல் பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.