Friday, 29 November 2024

NAS / SEAS EXAM 3 STD LAST 4 YEAR QUESTION PAPER

 NAS / SEAS EXAM 3 STD LAST 4 YEAR QUESTION PAPER

 nas%20question%20paper%20taminadu

மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை: முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை: முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

1341303

அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்க வகைசெய்யும் தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வுக்கு நவம்பர் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தம் 1,000 பேர் (500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஒரு கல்வி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இத்தேர்வில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் (கொள்குறி வகை) இடம்பெறும். தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் கணிதம் தொடர்பான 60 வினாக்களும், 2-வது தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான 60 வினாக்களும் கேட்கப்படும். முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 2-வது தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும்.

மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை உயர் கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த முதல்வரின் திறனாய்வுத் தேர்வு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 5 November 2024

 இல்லம் தேடி கல்வி ITK APP NEW UPDATE-0.86

Government Tablet Service Centres | ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Tablet ஆன service centre name and address ( All Districts

 Government Tablet Service Centres | ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Tablet ஆன service centre name and address ( All Districts 

 tablet-service-center-01

அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கு வணக்கம்... தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள tablet இக்கான service centre name and address அனுப்பப்பட்டுள்ளது.... தேவை உள்ள அனைத்து அரசு தொடக்க நிலை (1 to 5 ) ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து பயன்படுத்திக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது....

CCRT Training List

 CCRT Training List

 


CCRT Training List  - Download  Here

Saturday, 26 October 2024

Saturday, 19 October 2024

எண்ணும் எழுத்தும் - 1, 2 ,3 & 4,5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & உத்தேச விடைகள்...

 


எண்ணும் எழுத்தும் -  1, 2 ,3 & 4,5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & உத்தேச விடைகள்...

Class 1, 2 & 3 - Term 2 - Training Quiz Questions & Tentative Answers for Teachers Handling Ennum Ezhuthum...

1 to 3 Std Term 2 Training Q&A -pdf

Download Here


4 & 5th Std Term 2 Training Q&A -pdf

Download Here

Tuesday, 15 October 2024

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20241015_081117

தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-10-2024...


 Rainy season - Precaution instructions - Download here

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு


தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு

IMG_20241015_083751

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்தல் - அரசு தேர்வுகள் இயக்கக கடிதம், நாள் : 14-10-2024...

TTSE 2024 HALL TICKET - DGE Instructions - Download here

Wednesday, 9 October 2024

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 


வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள்! - Download Here

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது . தமிழ்நாட்டில் உள்ள 13,236 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 2024-25ஆம்கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2024-25செயல்முறைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது . அறிவியலும் தொழில்நுட்பமும் பொறியியலும் , கணிதவியலும் வாழ்வை சமூக வாழ்வை மென்மேலும் வசதியாக்க , எளிமையானதாக்க கை கோர்த்து சேவை செய்து வருகின்றன . எந்த ஒரு தொழில்நுட்பமும் கடந்த நூற்றாண்டைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடுகிறது . அதுபோலவே பழமையானதாகவும் ஆகிவிடுகிறது.மாறிவரும் சூழலை எதிர்கொண்டு தங்களை தகவமைத்துக் கொள்ள எதிர்கால சந்ததியினர் தயாராக வேண்டியுள்ளது . இதற்கேற்ப வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

இதனை மனதில் கொண்டே தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களின் பல்துறை வளர்ச்சிக்கு பல்வேறு புதுமையான ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வானவில் மன்றங்களின் அடுத்தகட்டம் அனைத்து வகுப்பறைகளிலும் அனைத்து மாணவர்களும் அறிவியலை செய்து பார்த்து கற்றுப் பகிர்ந்துகொள்வதாகவும் , தினம் தினம் புதுமையானதாகப் பரிணமிக்கும் வாய்ப்புள்ளதாகவும் மாறவேண்டியுள்ளது . ஏற்கனவே இப்படி படைப்பாற்றலுடன் செயல்பட்டு வரும் அறிவியல் / கணித ஆசிரியர்களே இதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின்அனுபவங்களைத் தொகுத்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவே தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல்மாநாடு 2024-25 திட்டமிடப்படுகிறது .

 

காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு


காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு

1323336

பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (அக்.8) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 தல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (100 மதிப்பெண்) அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்துவித ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இதுசார்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, 2 October 2024

தீபாவளி முன் பணம் களஞ்சிய. வலைதளத்தில் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை


தீபாவளி முன் பணம் களஞ்சிய. வலைதளத்தில் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை

 


FESTIVAL ADVANCE APPLY OPTION IN KALANCHIYAM APP

தீவாவளி முன் பணம் களஞ்சிய. வலைதளத்தில் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை

👇👇👇 Video 

https://youtu.be/ovYn-eVxT0g?si=Anm-EN69GSKuOVCa


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு `14.10.2024க்கு ஒத்திவைப்பு`!!


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு `14.10.2024க்கு ஒத்திவைப்பு`!!

 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு `14.10.2024க்கு ஒத்திவைப்பு`!!!

IMG_20241001_141921

12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.

 ஜூலை - 24ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.


அரசு தேர்வுகள் இயக்ககம்.

01.03.2024 முதல் ஆதி திராவிட நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பணி முன்னுரிமை (Statewise Seniority ) நிர்ணயம் செய்யப்படுவதாக விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

 


01.03.2024  முதல் ஆதி திராவிட நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பணி  முன்னுரிமை (Statewise Seniority ) நிர்ணயம் செய்யப்படுவதாக விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு 


ADW Teachers - State Seniority GO - Download Here

TNSED ADMINISTRATORS APP NEW UPDATED DIRECT LINK AVAILABLE! TNSED ADMINISTRATORS APP NEW UPDATED


TNSED ADMINISTRATORS APP NEW UPDATED DIRECT LINK AVAILABLE!

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி கல்வி

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி கல்வி

 



பள்ளிக்கல்வி - நன்னெறிக் கல்வி - உலகப்பொதுமறை திருக்குறள் - மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல் - நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் - மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக - Proceedings Download Here

திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்

 திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்

 



 

திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்

Sunday, 29 September 2024

செஞ்சிக் கோட்டையில் மத்திய தொல்லியல் துறையினருடன் யுனெஸ்கோ பிரதிநிதி ஆய்வு

 

செஞ்சிக் கோட்டையில் மத்திய தொல்லியல் துறையினருடன் யுனெஸ்கோ பிரதிநிதி ஆய்வு

விழுப்புரம்: செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.

உலக சுற்றுலா தினம் ஆண்டு தோறும் செப். 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவை பரந்த நோக்கில் அணுகுவதே உலக சுற்றுலா தினத்தின் நோக்கம். அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.

அவர்களை செஞ்சி எம்எல்ஏ-வான அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், ஆட்சியர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, செஞ்சி ஒன்றியக் குழுத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். செஞ்சிக் கோட்டையில் இக்குழுவினர் இன்று ஆய்வு செய்வதால் இக்குழுவைத் தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் - நடப்பாண்டில் 55,478 பேருக்கு வழங்க திட்டம்

 தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் - நடப்பாண்டில் 55,478 பேருக்கு வழங்க திட்டம்

 1317718

நடப்பாண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2-வது கட்டமாக 55,478 கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மாறி வரும் கற்றல் - கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக டேப்லெட் கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த கல்வியாண்டில் (2023-24) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.101.48 கோடியில் டேப்லெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக நல்வரவேற்பு கிடைத்தது. தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணிகளுக்கும் இது வழி செய்வதாக ஆசிரியர்கள் கூறினர்.

இந்நிலையில், தொடர்ந்து 2-வது கட்டமாக நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சார்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் செயல்பாடுகளை துரிதமாக முடித்து ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் டேப்லெட்கள் வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20240927_222519

காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👇👇👇

DSE - Climate Change Circular - Download here


நாய் வளர்ப்புக் கொள்கை (Dog Breeding Policy) 2024 - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!


நாய் வளர்ப்புக் கொள்கை (Dog Breeding Policy) 2024 - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!!

 IMG_20240927_233743

நாய் வளர்ப்புக் கொள்கை (Dog Breeding Policy) 2024 - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!!

Animal Husbandry Department Framing of " Tamil Nadu State Dog Breeding Policy " Orders - Issued .

`குறிப்பு: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நாய் கடித்து சிறுவர் / சிறுமியர் தொடர்ந்து பாதிக்கப்படுவதை அடுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை....`

G.O.Ms.No.80 - Download here